உடல் ஊனம் கடவுளின் வரம் அல்ல: திவ்யங் சொல்லுக்கு மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு

உடல் ஊனம் கடவுளின் வரம் அல்ல: திவ்யங் சொல்லுக்கு மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு
Updated on
1 min read

உடல் ஊனம் என்பது 'கடவுளின் வரம்' அல்ல. மாற்றுத்திறனாளிகளை 'திவ்யங்' என அழைப்பதால் அவர்கள் சமூகத்தில் ஒடுக்கப்படுவதோ, ஒதுக்கப்படுவதோ எவ்விதத்திலும் மாறப்போவதில்லை என உடல் சவால் கொண்டவர்கள் நலனுக்கான தேசிய அளவிளான அமைப்பின் தலைவர் ஜான்சி ராணி தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளை ரயில்வே பட்ஜெட்டில் 'திவ்யங்' என்ற புதிய வார்த்தையைக் கொண்டு குறிப்பிட்டிருப்பது கடும் அதிருப்தி அலையை ஏற்படுத்தியிருக்கிறது.

2016-2017-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் நிலையை குறிப்பிடும் வகையில் 'திவ்யங்' என்ற வார்த்தை பட்ஜெட்டில் குறிப்பிடப்படுள்ளது.

திவ்யங் என்ற வார்த்தை பயன்பாட்டுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த பட்ஜெட்டில் தங்களுக்கு என்று சிறப்பாக எவ்வித சலுகைகளையும் அரசு அறிவிக்கவில்லை என மாற்றுத்திறனாளிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். திவ்யங் என்ற புதிய வார்த்தை மூலம் தங்களை அழைத்திருப்பது அதிருப்தி அளித்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உடல் ஊனம் என்பது 'கடவுளின் வரம்' அல்ல. மாற்றுத்திறனாளிகளை 'திவ்யங்' என அழைப்பதால் அவர்கள் சமூகத்தில் ஒடுக்கப்படுவதோ, ஒதுக்கப்படுவதோ எவ்விதத்திலும் மாறப்போவதில்லை என உடல் சவால் கொண்டவர்கள் நலனுக்கான தேசிய அளவிளான அமைப்பின் தலைவர் ஜான்சி ராணி தெரிவித்துள்ளார்.

உடல் ஊனம் விதிப்பயன் என்பது போல் ஒரு வார்த்தையை அரசு உருவாக்கியதற்கு ஒருபுறம் அதிருப்தி வெளியாகிவரும் நிலையில் திவ்யங் என்று பொதுப்படையாக கூறினால் அதில் எத்தகைய ஊனம் எல்லாம் கணக்கில் கொள்ளப்படும் என மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு அமைப்புகளும் கேள்வி எழுப்பியுள்ளன.

அதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டண வீல்சேர் சேவை ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. சாரதி / ரயில் மித்ரா என இந்த சேவைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூகநீதிக்கான ஈகுவல்ஸ் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அம்பா சலேகர் கூறும்போது, "மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு சேவைகளும் கட்டண சேவைகளாக இருப்பது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் பேட்டரி மூலம் இயங்கும் வீல்சேர்கள் ரயில்நிலையங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், கொங்கன் ரயில்வே மண்டலத்தில் அதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பாகுபாடுக்கு காரணம் என்ன?" என்றார்.

மாற்றுத்திறனாளிகளின் ரயில் பயணத்தை சுமுகமானதாக்குவதற்கான கோரிக்கைகளை அரசு எவ்விதத்திலும் பூர்த்தி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in