Published : 14 Jul 2021 11:46 AM
Last Updated : 14 Jul 2021 11:46 AM

உலகில் பேசப்படும் அழகிய மொழிகளில் ஒன்று உருது: வெங்கய்ய நாயுடு புகழாரம்

ஹைதராபாத்

உலகில் பேசப்படும் அழகிய மொழிகளில் ஒன்று உருது என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பல்வேறு புத்தங்களை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மூத்த பத்திரிக்கையாளர் ஜே.எஸ். இப்தேக்கார் எழுதிய 'உருது புலவர்களும் எழுத்தாளர்களும்' என்ற புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்.

முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் பற்றி சத்யகாஷி பார்கவா எழுதிய புத்தகத்தை தெலங்கானா மாநில மொழி மற்றும் கலாச்சார துறை இயக்குநர் மம்மிடி ஹரிகிருஷ்ணாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர், மல்லிகார்ஜூன் எழுதிய 'நல்லகொண்டா கதலு' புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்ய நாயுடு தாய் மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த , நாம் அனைவரும் நமது மொழியிலேயே பேச வேண்டும் என வலியுறுத்தினார். நாட்டின் டெக்கான் பள்ளத்தாக்கு பகுதியில், குறிப்பாக ஹைதராபாத்தில் ஏராளமான பண்டைய உருது நிலையங்கள் இருந்ததாக அவர் தெரிவித்தார். உலகில் பேசப்படும் அழகிய மொழிகளில் ஒன்றாக உருது எனவும் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை வெளிக்கொண்டு வந்ததற்காக தெலங்கானா அரசுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர், அனைத்து மாநில அரசுகளும் உள்ளூர் மற்றும் பிராந்திய தலைவர்கள் பற்றி புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்றும், இதன்மூலம் இளம் தலைமுறையினருக்கு அவர்களைப் பற்றி தெரிய வரும் என்றும் கூறினார்.

இறைவன் ராமனின் குணத்தை சிறந்த மனிதனுக்கான குணமாக குறிப்பிட்டு புத்தகம் வெளியிட்டுள்ள 'மனவோட்ட ராமா' புத்தகத்தின் எழுத்தாளருக்கு குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டு தெரிவித்தார். இறைவன் ராமனது குணநலன்கள் எக்காலத்துக்கும் ஏற்றவை என அவர் கூறினார்.

'நல்லகொண்டா கதலு' புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட குடியரசுத் துணைத் தலைவர்வெங்கைய நாயுடு, நாட்டுப்புற கதைகள் எழுதுவதன் அவசியத்தையும், கிராமிய கதைகளை எதிர்கால தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறினார்.

இதே போல், அன்றாட வாழ்கையில் தொடர்பு உள்ள வகையில் குழந்தைகள் இலக்கியங்கள் எழுத முன்னெடுப்புகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.புத்தகங்களை வெளியிட முயற்சி மேற்கொண்ட எழுத்தாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு வாழ்த்து தெரிவித்தார்.

டெக்கானின் இரத்தினங்கள் என்ற தொடர் கட்டுரை மற்றும் கவிதை புத்தகம், டெக்கான் பகுதியில் வாழ்ந்த சிறப்பான 51 கவிஞர்கள் மற்றும் எழுத்தார்களின் வாழ்கை மற்றும் படைப்புகளைப் பற்றி பேசுகிறது. தற்கால ஹைதராபாத்தை தோற்றுவித்தவரான முகமது குலி குதுப் ஷப் காலத்திலிருந்து டெக்கான் பகுதியில் நிலவிய புகழ்வாய்ந்த கலாச்சார மற்றும் இலக்கிய பாரம்பரியத்தின் வேர்களை இப்புத்தகம் தேடிச் செல்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x