Published : 14 Jul 2021 03:13 AM
Last Updated : 14 Jul 2021 03:13 AM

தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு ரூ.50 கோடி கொடுத்து தெலங்கானா காங். தலைவரானார் ரேவந்த் ரெட்டி: மாநிலச் செயலாளர் பதவியிலிருந்து விலகிய கவுஷிக் ரெட்டி குற்றச்சாட்டு

தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, இப்பதவியைப் பெற தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு ரூ.50 கோடி கொடுத்துள்ளார் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பதவியிலிருந்து விலகிய கவுஷிக் ரெட்டி குற்றம்சாட்டி உள்ளார்.

தெலங்கானா காங்கிரஸ் செயலாளர் கவுஷிக் ரெட்டி, தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) செயல் தலைவர் கே.டி.ராமா ராவை சமீபத்தில் சந்தித்துப் பேசினார்.

இதனிடையே, டிஆர்ஸ் பிரமுகர் ஒருவருடன் கவுஷிக் பேசுவது போன்ற ஒரு குரல் பதிவு வெளியானது. அதில், “ஹுசுராபாத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு அளிப்பதாக டிஆர்எஸ் கட்சி உறுதி அளித்துள்ளது. நான் உங்களை கவனித்துக் கொள்கிறேன். உங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களை எனக்கு ஆதரவாக செயல்பட வையுங்கள். அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்குகிறேன்” என கவுஷிக் கூறுகிறார்.

இதுகுறித்து 24 மணி நேரத்தில்விளக்கம் அளிக்குமாறு தெலங்கானா காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு கவுஷிக் ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, கட்சியிலிருந்து விலகு வதாக அறிவித்த கவுஷிக், தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கவுஷிக் கூறும்போது, “தெலங்கானாவில் நிலவும் அரசியல் சூழலால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன். மாநிலத்தின் வளர்ச்சியில் பங்கேற்க முடிவு செய்துள்ளேன். இங்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியைப் பெற, மாநிலப் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ரேவந்த் ரெட்டி ரூ.50 கோடி கொடுத்துள்ளார்” என்றார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியிலி ருந்து கவுஷிக் ரெட்டி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x