

உத்தரபிரதேசத்தில் மதக்கலவரத் துக்கு பெயர்பெற்ற நகரமாக இருப்பது மீரட். இங்கு முகலாயர் காலத்தில் சுல்தான் நஸ்ரித்தீன் ஷாவால் 1306-ல் கட்டப்பட்ட ஜாமியா மசூதி உள்ளது. பழம் பெரும் மசூதியான இதன் பரா மரிப்பு பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றன.
மார்பிள் எனும் சலவைக்கற் களில் சிற்ப வேலைகள் இதன் பல இடங்களில் செய்யப்பட்டுள்ளன. மிகவும் நுணுக்கமான இந்த சிற்பங்களில் பூ மற்றும் குர்ஆனின் சில வாசகங்களும் இடம் பெற் றுள்ளன. காலப்போக்கில் ஏற்பட்ட சேதங்களும் தற்போது மசூதி நிர்வாகத்தால் சரிசெய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2019-ல் முடிக்கப்பட வேண்டிய இப்பணி கரோனா ஊரடங்கால் தடைபட்டிருந்தது. சலவைக்கற்களில் நுணுக்கமான சிற்ப வேலைகளை அனைவராலும் செய்ய முடியாது. ராஜஸ்தானில் இந்த சலவைக்கற்களுக்கு பெயர் பெற்ற இடங்களில் ஒன்றான பரத்பூரின் ஹிந்தவ்ன் பகுதி இந்து சிற்பிகள் இப்பணியில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களில் சிலரான தரம்வீர், வினோத், பப்பு ஆகியோர் மீரட் மசூதி சிற்ப வேலைகளை செய்து வருகின்றனர். இந்து சிற்பிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளது மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட் டாக உள்ளது
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஹிந்தவ்ன் சிற்பி யான தரம்வீர் கூறும்போது, “இச்சிற்பவேலைக்கு நற்பெயர் இருப்பினும் அது உயிருக்கு ஆபத்தானப் பணியாக உள்ளது. பறக்கும் இதன் தூசுகள் உடலில்நுழைந்து சிலுகாஸிஸ் எனும்நோயால் பலரும் பாதிக்கப்படுகின் றனர். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 50 பேர் இந்த நோயால் இறந்துவிட்டனர். நாங்கள் 5-வதுதலைமுறையாக இப்பணியை செய்தாலும் எங்கள் பிள்ளைகள் இப்பணியை தொடர விரும்பவில்லை” என்றார்.
இப்பணியில் உள்ள ஆபத்து காரணமாக அதன் மீதான பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்திஹிந்தவ்ன் உள்ளிட்ட ராஜஸ்தானின் சிற்பிகளுக்கு உதவ பல சமூகசேவை நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த சிற்பிகள் நாடுமுழுவதிலும் உள்ள சுமார் 50 மசூதிகளில் சிற்ப பராமரிப்பு பணியை செய்துள்ளனர். இவற்றில், டெல்லியில் முகலாய மன்னர் ஷாஜஹான் கட்டிய ஜாமியா மசூதியும் ஒன்றாகும்.