நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி: 38.11 கோடியைக் கடந்தது

நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி: 38.11 கோடியைக் கடந்தது
Updated on
1 min read

38 கோடிக்கும் அதிகமான (38,11,04,836) கோவிட்-19 தடுப்பூசிகளை நாடு இதுவரை செலுத்தியுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜூன் 21-ல் இருந்து அனைவருக்கும் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ள நிலையில், நேற்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 37.03 லட்சம் (37,03,423) தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

18-44 வயது பிரிவில் 16,61,804 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 1,40,806 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோஸையும் நேற்று பெற்றனர், 37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 11,41,34,915 பேர் முதல் டோஸையும், 38,88,828 நபர்கள் இரண்டாம் டோஸையும், மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இதுவரை பெற்றுள்ளனர்.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, பிஹார், குஜராத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் 18-44 வயது பிரிவினருக்கு 50 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியுள்ளன.

ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், தில்லி, ஹரியாணா, ஜார்கண்ட், கேரளா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், உத்தரகாண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் கொவிட் தடுப்பு மருந்தை இதுவரை வழங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 64,08,323 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 2,13,136 நபர்கள் இரண்டாம் டோஸையும் இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 2,16,395 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 1,142 பேர் இரண்டாம் டோஸையும் இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in