Published : 12 Jul 2021 03:12 AM
Last Updated : 12 Jul 2021 03:12 AM

தீவிரவாதத்துக்கு நிதி திரட்டியதற்காக ஹிஸ்புல் தலைவரின் 2 மகன்கள் பணி நீக்கம்: காஷ்மீர் நிர்வாகம் நடவடிக்கை

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சையது சலாலுதீனின் இரு மகன்கள் வெவ்வேறு அரசுப் பணிகளில் இருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய குற்றத்துக்காக அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட தாக காஷ்மீர் நிர்வாகம் தெரிவித் துள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நீக்கியது. மேலும், காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதனைத் தொடர்ந்து, காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகள் மேற்கொண்டுள்ளன.

இதன் விளைவாக, கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டி ருக்கின்றனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் பெருமளவில் குறைந்து வரு கின்றன.

ஆயுதங்கள் வழங்கல்

இது ஒருபுறம் இருக்க, திரை மறைவில் இருந்து தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி மற்றும் ஆயுதங்களை வழங்கி வருவோர் மீதும் காஷ்மீர் நிர்வாகம் அண்மைக்காலமாக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது.

இதன் ஒருபகுதியாக, தீவிர வாத அமைப்புகளுக்கு நிதி திரட்டி வரும் அரசு ஊழியர்களை கண்டறிந்து அவர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் காஷ்மீர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதம் மொத்தம் 11 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய குற்றத்துக்காக நேற்று முன்தினம் 8 பேர் அரசுப் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். அவர் களில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சையது சலாலுதீனின் இரண்டு மகன்களும் அடங்குவர். சலாலு தீனின் மூத்த மகன் சையது அகமது ஷகில் என்பவர் நகர் ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் தொழில்நுட்ப நிபுணராக பணிபுரிந்து வந்தார். இரண்டாவது மகனான ஷாகித் யூசுப், வேளாண் துறையில் பணியாற்றி வந்தார்.

ரகசிய விசாரணை

போலீஸார் நடத்திய ரகசியவிசாரணையில், இவர்கள் இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புக்கு பல ஆண்டுகளாக நிதி திரட்டி வழங்கி வந்தது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, 311 (சி) சட்டப்பிரிவின் கீழ் அவர்களை பணிநீக்கம் செய்து காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x