மானியங்களை சார்ந்திராமல் தன்னிறைவு அடைய வேண்டும்: ஜவுளி துறையினருக்கு  பியூஷ் கோயல் வலியுறுத்தல்

மானியங்களை சார்ந்திராமல் தன்னிறைவு அடைய வேண்டும்: ஜவுளி துறையினருக்கு  பியூஷ் கோயல் வலியுறுத்தல்
Updated on
1 min read

ஜவுளி துறையினர் ஆராய்ச்சி நிறுவனங்கள் அரசு மானியங்கள் மீது சார்ந்திராமல் தன்னிறைவு அடைய வேண்டும் என மத்திய ஜவுளி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ஜவுளி துறை திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக மும்பையில் உள்ள ஜவுளி ஆணையர் அலுவலகத்திற்கு முதல் முறையாக சென்ற மத்திய ஜவுளி அமைச்சர் பியுஷ் கோயல், செயல்படுத்தலை விரைவு படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் தெரிவித்தார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீதும், சிறு நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கான சிறப்பு திட்டங்களை உருவாக்குவதன் மீதும் அமைச்சர் கவனம் செலுத்தினார்.

அனைத்து ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுக்களின் ஏற்றுமதிகளையும் இரட்டிப்பாக்குமாறு பங்குதாரர்களை திரு பியுஷ் கோயல் கேட்டுக்கொண்டார்.

“தொழிலுக்கு ஆதரவளிக்க மானியம் சாராத நிதி உபகரணங்களை உருவாக்குங்கள். அத்தகைய உத்தரவாதத்தின் மூலம் வங்கிகளிடம் இருந்து நிலையான கடன் வழங்கலை உறுதிப்படுத்துங்கள்,” என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

ஆராய்ச்சி நிறுவனங்கள் அரசு மானியங்கள் மீது சார்ந்திராமல் தன்னிறைவு அடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட கோயல், பஷிமா கம்பளியை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in