ரயில்வேயில் இன்ஜினீயராக பணிபுரியும் நண்பரை கட்டித் தழுவிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி

ரயில்வேயில் இன்ஜினீயராக பணிபுரியும் நண்பரை கட்டித் தழுவிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி
Updated on
1 min read

அண்மையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் அஸ்வினி வைஷ்ணவ் புதிய அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு ரயில்வே அமைச்சகம் ஒதுக்கப் பட்டது. கடந்த 8-ம் தேதி ரயில்வே அமைச்சகத்துக்கு வந்து, தனதுபொறுப்புகளை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஏற்றுக் கொண்டார்.

அப்போது ரயில்வேயில் இன்ஜினீயராக பணிபுரியும் ஒருவர் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர் என்று அமைச்சரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த இன்ஜினீயரை வரவழைத்து கட்டித் தழுவிபாராட்டினார் அஸ்வினி வைஷ்ணவ். அஸ்வினி வைஷ்ணவும், அந்த இன்ஜினீயரும் ஜோத்பூரிலுள்ள எம்பிஎம் இன்ஜினீயரிங் கல்லூரியில் ஒன்றாகப் படித்த வர்கள்.

நண்பரைப் பார்த்ததும், “வா நண்பா. நாம் இருவரும் கட்டித் தழுவுவோம்" என்று ஆனந்தம் பொங்க கூறினார் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். மத்திய அமைச்சரின் நட்புணர்வை அதிகாரிகள் நேரில் பார்த்து வியந்தனர். நண்பர்கள் கட்டித் தழுவும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது.

இன்ஜினீயரிங் படிப்பைப் படித்து முடித்த அஸ்வினி வைஷ்ணவ், பின்னர் 1994-ல் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். மேலும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலுள்ள வார்ட்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸிலும் படித்தவர் என்பது குறிப் பிடத்தக்கது. - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in