Published : 10 Jul 2021 03:37 PM
Last Updated : 10 Jul 2021 03:37 PM

ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தினால் ரூ.10,000 அபராதம்: டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி

ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இன்று புதிதாக பிறப்பித்துள்ள உத்தரவில், "ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.

1000 கிலோ வாட் ஆம்ப் திறனக்கும் அதிகமான திறன் கொண்ட டீசல் ஜெனரேட்டர்களில் இருந்து வரும் ஒலி மாசுபாட்டிற்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் கட்டுமான இடங்களில் அனுமதிக்கப்பட்ட சத்தத்திற்கு மேல் எழுப்பினால் அந்த உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும். அதற்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.

குடியிருப்புப் பகுதிகளில் பகலில் சத்தம் அளவு 55 டெசிபல் மற்றும் இரவில் 45 டெசிபல் என்ற அளவிலேயே அனுமதிக்கப்படும் .

குடியிருப்புப் பகுதியில் பட்டாசு வெடித்தால் ரூ.1,000 அபராதம் மற்றும் அமைதி மண்டலத்தில் வெடித்தால் ரூ.3,000 அபராதம் விதிக்கப்படும்.

தொழில்துறை பகுதிகளில் சத்தம் அளவு பகலில் 75 டெசிபல் மற்றும் இரவில் 70 டெசிபல் வரை இருக்கலாம்.

மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் போன்ற அதிக சத்தம் தடைசெய்யப்பட்ட பகுதிகள் பகலில் 50 டெசிபல் மற்றும் இரவில் 40 டெசிபல் வரை அதிகமாக இருக்கலாம்.

பொதுப் பேரணி அல்லது ஊர்வலத்தில் இதே குற்றத்திற்கான அபராதம் முறையே குடியிருப்பு மற்றும் அமைதி மண்டலங்களுக்கு ரூ.10,000 மற்றும் ரூ.20,000 வசூலிக்கப்படும் என்று வசூலிக்கப்படும் " எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x