இஸ்லாமிய நாடுகள் அமைப்புக்கு மத்திய அரசு கடும் கண்டனம்

இஸ்லாமிய நாடுகள் அமைப்புக்கு மத்திய அரசு கடும் கண்டனம்
Updated on
1 min read

ஜெட்டாவில் கடந்த 5-ம் தேதி இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பின் (ஓஐசி) பொதுச் செயலாளர் யூசுப் ருல் ஒதிமீன் இந்திய தூதர் அவ்சப் சயீதை சந்தித்துப் பேசினார். பின்னர், ஓஐசி பொதுச் செயலாளர் யூசுப் வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீர் விவகாரம் குறித்தும் இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், காஷ்மீர் நிலவரத்தை பார்வையிட ஓஐசி குழுவை அனுமதிக்க கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. காஷ்மீரில் மூன்றாவது நபர் தலையிடுவது, அங்கு சென்று பார்வையிடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. காஷ்மீருக்கு குழுவை அனுப்ப வேண்டும் என்ற ஓஐசியின் கோரிக்கை அதன் உறுப்பினர்களை திருப்திப்படுத்துவதற்குத்தான்.

இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை நன்றாக உள்ளது. அவர்கள் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுவது அடிப்படையற்றது. இதுபோன்று தவறாக சித்தரிக்கப்படுவதன் பின்னணியில் சுயநல சக்திகள் இருக்கின்றன

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in