

அரசு அதிகாரியை தாக்கிய வழக்கில், பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஜார்கண்ட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
மின்வெட்டு பிரச்சினைக்காக ஹசாரிபாக்கில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட பாஜக ஆதரவாளர்கள் தன்னைக் கட்டிப் போட்டதாக ஜார்க்கண்ட் மின்வாரிய ஹசாரிபாக் கிளை பொது மேலாளர் தனேஷ் ஜா புகார் செய்திருந்தார். இதையடுத்து சின்ஹா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட 55 பேருக்கு உள்ளூர் நீதிமன்றம் கடந்த 3-ம் தேதி சிறைக்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி விண்ணிப்பிக்க மறுத்ததால் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஆர்.பி.பால் உத்தரவிட்டார்.
கயிற்றால் ஜாவின் கைகளை கட்டிப் போடும்படி கட்சியின் மகளிர் பிரிவினருக்கு தான் உத்தரவிட்டதாக பத்திரிகையாளர்களிடம் ஒப்புக்கொண்டார் சின்ஹா. “பொது மேலாளரின் கைகளை கட்டிப்போடும்படி நான் கட்சியின் பெண் தொண்டர்களுக்கு உத்தரவிட்டேன். மின்வெட்டு காரணமாக பெண்கள் மிகவும் அவதியுறுகிறார்கள். மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது” என்றார் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.