Published : 09 Jul 2021 07:53 PM
Last Updated : 09 Jul 2021 07:53 PM

பாலூட்டும் தாய்மார்கள் கரோனா தடுப்பூசி போடுவதால் குழந்தைகளுக்கும் பலன்: ஐசிஎம்ஆர் விளக்கம்

புதுடெல்லி

பாலூட்டும் தாய்மார்கள் கரோனா தடுப்பூசி போடுவதால் தாய்க்கு உருவாகும் எதிர் பொருள் குழந்தைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோயியல் பிரிவு தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
பாலூட்டும் தாய்மார்கள், கோவிட்-19க்கு எதிராக எந்த தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதன் காரணமாக தாய்க்கு உருவாகும் எதிர் பொருள், தாய்பாலூட்டும் போது குழந்தைக்கும் சென்று பயனுள்ளதாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி, எதிர்பொருள்களை மட்டும் சார்ந்தது அல்ல என்பதால், எதிர்பொருள் பரிசோதனைக்கு செல்வது வீண். உடலில் உருவாகும் எதிர்பொருட்கள், கோவிட்-19 நோயிலிருந்து பாதுகாக்கும் எதிர்பொருட்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் தடுப்பூசி போடும்போது இரு வகையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. ஒன்று எதிர்பொருளை சமநிலைப்படுத்தும். இரண்டாவது செல் மத்தியஸ்த நோய் எதிர்ப்பு சக்தியாகும்.

மூன்றாவது மற்றும் மிக முக்கியமான ஒன்று நோய் எதிர்ப்பு சக்தி. இந்த நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பூசி போட்டபின்பு ஏற்படுகிறது இது உடல் செல்லில் இருக்கிறது. வைரஸ் உடலில் நுழையும்போது, இது எதிர்த்து செயல்படுகிறது.

ஆஸ்த்துமா, தூசி அலர்ஜி, மகரந்த துகள் அலர்ஜி உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இணை நோய் உள்ளவர்களும், நிலையாக இருந்தால், தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களும், இதர பிரச்சினைகள் உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. ஏனென்றால் அவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்.

புதிய வகை கரோனாக்கள் பரவும் நிலையில் ஏற்கெனவே கூறப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சையில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கெனவே உள்ள கரோனா வகையாக இருந்தாலும், புதிய வகை கரோனாவாக இருந்தாலும், அனைத்து வகைகளும், பரவும் விதம் ஒரே மாதிரியானதுதான். முகக்கவசம் அணிவது, கூட்டம் உள்ள இடங்களை தவிர்ப்பது, கிருமிநாசினி ஆகியவை இன்னும் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் திறமையான நடைமுறைகளாக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x