

நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில், கேரளாவில் மட்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா வுக்கு அடுத்தபடியாக கேரளாவில் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் கேரளாவில் கடந்த 2020 ஜனவரியில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் கரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக கேரளா உள்ளது.
கேரளாவில் கரோனா மொத்த நோயாளிகள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 30 லட்சத்தை கடந்தது. நாட்டில் மகாராஷ்டிராவுக்கு பிறகு நோயாளிகள் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்த 2-வது மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது.
கேரளாவில் புதிய நோயாளிகள் எண்ணிக்கை ஜூன் 28 முதல் கிட்டத்தட்ட இரு மடங்காகியுள்ளது. கடந்த ஜூன் 28-ல் 8,063 ஆக இருந்த புதிய நோயாளிகள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 15,600 ஆக அதிகரித்தது.
இம்மாநிலம் கடந்த ஜூன் 9-ம் தேதி, 16,204 நோயாளிகளுடன் 15,000 என்ற வரையறையை கடந்தது. மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை 148 என்பது கூட, கடந்த ஜூன் 24-க்கு பிறகு மிக அதிகமாகும்.
நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை குறைந்து வரும் வேளையில் கேரளாவில் மட்டும் அதிகரித்து வருகிறது.
அம்மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் 1.01 லட்சம் நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில் 1.23 லட்சம் பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கேரளாவில் கடந்த ஜூன் 28-ம் தேதி, சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 96,012 ஆக இருந்தது. இது நேற்று முன்தினம் 1.08 லட்சமாக அதிகரித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் கேரளாவில் மட்டுமே தினசரி பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றை தவிர நாட்டின் மற்ற மாநிலங்களில் தினசரி பாசிட்டிவ் விகிதம் 5 சதவீதத்துக்கு குறைவாக உள்ளது.
கடந்த ஜூலை 6-ம் தேதி நாட்டின் வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 2.4 சத வீதமாக இருந்த நிலையில் கேரளாவில் மட்டும் இது 10.2 சதவீதமாக இருந்தது. அண்டை மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் வேளை யில் கேரளாவில் மட்டும் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கேரளாவில் கடந்த 10 நாட்களில் சிகிச்சை யில் உள்ள நோயாளிகள் எண் ணிக்கை கிட்டத்தட்ட 12 ஆயிரம் அதி கரித்துள்ள நிலையில், இது மூன் றாவது அலைக்கான அறிகுறியாக கூட இருக்கலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.