

கரோனா வைரஸ் பரவலை தடுக்க வசதி யாக அவசரகால நிதியாக ரூ.23,123 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் 736 மாவட்டங்களில் 20 ஆயிரம் ஐசியு படுக்கை வசதி கள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஏற்கெனவே அமைச் சர்களாக இருந்த 12 பேர் ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், விரிவுபடுத்தப்பட்ட புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில் வேலை வாய்ப்பு, விவ சாயம், கரோனா வைரஸை கட்டுப் படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
அமைச்சரவை கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக் கினர். அவர்கள் கூறியதாவது:
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வசதியாக அவசரகால நிதி யாக ரூ.23,123 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதி, தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) படுக்கை வசதி, மருந்துகள் மற்றும் பிற மருத்துவக உபகரணங்கள் வாங்கு வதற்கு பயன்படுத்தப்படும்.
இந்த நிதி மூலம் 736 மாவட்டங்களில் 20 ஆயிரம் ஐசியு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், கரோனா வைரஸ் தடுப்புக்குத் தேவையான மருந்துகளை போதிய அளவு வாங்கி இருப்பில் வைத்துக்கொள்ள உதவும்.
மொத்த ஒதுக்கீடான ரூ.23 ஆயிரம் கோடியில் ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு செலவிடும். ரூ.8 ஆயிரம் கோடி மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும். இந்த நிதி அடுத்த 9 மாதங்களில் செலவிடப்படும்.
கரோனா வைரஸ் தடுப்புக்காக மத்திய அரசு இரண்டாவது முறையாக அவசரகால நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. மருத்துவம் சார்ந்த கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கரோனா 3-வது அலை குழந்தை களை தாக்காமல் தடுக்க எடுக்க வேண் டிய நடவடிக்கைகள் குறித்தும் அமைச் சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது. 736 மாவட்டங்களில் குழந்தை கள் நல மையம் உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
வேளாண் துறை
அதைத் தொடர்ந்து வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:
புதிய வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில் வேளாண் உற்பத்தி சந்தை குழுவால் (ஏபிஎம்சி) ஏதும் செய்ய இயலாது என்று கூறப்பட்டது. ஆனால், ஏபிஎம்சி-யும் இதில் ஒரு அங்கம் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதோடு ரூ.1 லட்சம் கோடி கட்டமைப்பு நிதி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் ஏபிஎம்சி பயன்பெறும். அதாவது புதிதாக கடன் வழங்குவது, வட்டி தள்ளுபடி போன்ற நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
ஏபிஎம்சி செயல்பாட்டை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென மேற்கொள் ளப்பட்ட நடவடிக்கைகளில் ஏபிஎம்சி-க்களுக்கு புதிய நிதி வளங்களை ஏற் படுத்தும் வகையில் ‘ஆத்ம நிர்பாரத்’ திட்டத்தின்கீழ் ரூ.1 லட்சம் கோடி ஒதுக் கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. விவசாயிகள் கட்டமைப்பு நிதியம் என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்ட இந்த நிதியத்தை ஏபிஎம்சி பயன்படுத்த முடியும். மாநிலங்களில் உள்ள விவ சாய சம்மேளனங்களுக்குத் தேவை யான கடனுதவி ஏபிஎம்சி மூலம் அளிக்கப்படும்.
இதன்படி, தனி நபர்கள், அமைப்பு கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் மேம்பாட்டு அமைப்புகள், வேளாண் ஸ்டார்ட்-அப்கள், வேளாண் சங்கங்கள் அனைத்துமே 3 சதவீத வட்டி மானிய சலுகையுடன் ரூ.2 கோடி வரை கடன் பெற முடியும்.
வேளாண் கட்டமைப்பு நிதியம் (ஏஐஎப்) மூலம் வேளாண் கட்டமைப்பு வசதிகளான குளிர்பதன கிடங்குகள், உணவு பாதுகாப்பு கிடங்குகள் உள்ளிட்டவை அமைக்க கடன் பெற முடியும். இதில் குறுகிய கால, நீண்ட கால நிதி வசதி கிடைப்பது வேளாண் துறைக்கு ஊக்குவிப்பாக அமையும். இந்த கடன் உதவி திட்டமானது நான்கு ஆண்டு முதல் 6 ஆண்டுகள் வரையானது. சில கடன்களுக்கு 10 முதல் 13 ஆண்டுகள் வரையும் சலுகை விரிவுபடுத்தப்படும்.
வேளாண் துறையை ஊக்குவிக்க அரசு எடுத்துள்ள பல்வேறு நலத் திட்டங் களை கருத்தில்கொண்டு விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும்.
தென்னை உற்பத்தியை அதிகரிக்க புதிதாக தேங்காய் வாரியச் சட்டம் கொண்டு வரப்படும். தென்னை வாரியத் தின் தலைவராக அரசு அதிகாரி அல் லாத ஒருவர் நியமிக்கப்படுவார். அவர் விவசாய பின்புலம் கொண்டவராக இருப்பார். இந்த வாரியம், இத்துறை வளர்ச்சிக்கு உதவும்.
இவ்வாறு தோமர் கூறினார்.