Published : 09 Jul 2021 03:13 am

Updated : 09 Jul 2021 06:09 am

 

Published : 09 Jul 2021 03:13 AM
Last Updated : 09 Jul 2021 06:09 AM

2024 மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 4 பேருக்கு இடம்

west-bengal

புதுடெல்லி

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த4 பேருக்கு புதிதாக இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது மாநிலத்தில் பாஜகவை பலப்படுத்தும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.

மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் விரிவுபடுத்தப்பட்டது. புதிதாக 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 4 பேர் இணை அமைச்சர்களாக பதவியேற்றனர். கூச் பெஹார் பகுதியைச் சேர்ந்தவரான 35 வயதான நிதிஷ் ப்ரமானிக் அமைச்சரவையிலேயே மிகவும் இளம் வயதுடையவர். ராஜ்போங்ஷி சமூகத்தில் செல்வாக்கு மிக்க இவருக்கு உள்துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


மேற்குவங்கத்தின் வடக்கு பகுதியைச் சேர்ந்த தலித் தலைவரான ஜான் பர்லாவுக்கு சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தலித் மக்கள் அதிகம் வசிக்கும் அலிப்புர்துவார் மாவட்டத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜகவெற்றி பெற ஜான் பர்லா முக்கியகாரணமாக இருந்தார். அப்பகுதியில் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் அவருக்குஅமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் தெற்கு பகுதியைச்சேர்ந்த 38 வயதான சாந்தனு தாக்குர், கப்பல்துறை இணை அமைச்சராகியுள்ளார். மதுவா சமூக மக்களிடம் சாந்தனு தாக்குருக்கு செல்வாக்கு உள்ளது. மதுவாமக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பாஜக செல்வாக்கு பெற சாந்தனுதாக்குர் கடுமையாக உழைத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட ஜங்கல் மஹால் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சர்க்கார்.டாக்டரான இவருக்கு அப்பகுதி மக்களிடையே நல்ல பெயர் உள்ளது. கல்வித் துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து கட்சியை பலப்படுத்துவதோடு 2024 மக்களவைத் தேர்தலையும் மனதில் கொண்டே மேற்கு வங்கத்தில் புதிதாக 4 பேருக்கு மத்திய இணைஅமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.-பிடிஐ


2024 மக்களவைத் தேர்தல்மத்திய அமைச்சரவைஅமைச்சரவை விரிவாக்கம்மேற்கு வங்கம்இணை அமைச்சர் பதவிபாஜகWest bengal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x