Published : 05 Feb 2016 10:52 AM
Last Updated : 05 Feb 2016 10:52 AM

பெண் கல்வியை ஊக்கப்படுத்த ஏழை குழந்தைகளுக்கு தங்கத் தோடுகளை அன்பளிப்பாக வழங்கிய பிச்சைக்காரர்

குஜராத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்



*

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மெஹ்சானா நகரின் கோயில்களில் பக்தர்களிடம் பிச்சை எடுத்து வருபவர் கிம்ஜிபாய் பிரஜாபதி.செல்வத்தில் குறைந்தவர் என்றபோதிலும், அந்நகர மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்றவர்.

கடந்த 13 ஆண்டுகளாக ஏழை பெண் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பள்ளிச் சீருடைகள் மற்றும் பள்ளிக் கட்டணம் செலுத்து வது என பிச்சை எடுத்த பணத்தில் இருந்து மிச்சப்படுத்திய பணத்தை கொண்டு தான தர்மங்கள் செய்து வருகிறார். இதுவரை ரூ.80 ஆயிரம் வரை செலவிட்டிருக்கிறார். தவிர 12 ஆரம்ப பள்ளி மற்றும் மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளுக்காகவும் நன் கொடைகளை வாரி வழங்கி இருக் கிறார் இந்த கலியுக பாரி வள்ளல்.

சமீபத்தில் தனது ஊன்று கோலால் அங்கன்வாடி மையத் துக்கு பிரஜாபதி நடந்து வருவதை கண்டதும் நோட்டு, புத்தகங்கள் வழங்கப் போகிறார் என அங் கிருந்த குழந்தைகளின் தாய்மார்கள் ஊகித்தனர்.

ஆனால் நடந்ததோ வேறு. தன்னிடம் இருந்த சிறிய பையை திறந்து நகை பேழையை அவர் கையில் எடுத்ததும் அனைவரது புருவங்களும் உயர்ந்தன. ஆம் அந்த பள்ளியில் படித்து வந்த 10 ஏழை சிறுமிகளுக்கு தங்கத் தோடு வைக் கப்பட்டிருந்த நகை பேழையைத் தான் அவர் வழங்கினார். 13 ஆண்டு களாக வழங்கி வந்த நோட்டுப் புத்தக தானத்துக்கு பதிலாக தங்கத் தோடுகளை பிரஜாபதி வாரி வழங்கியதை கண்டு ஒருநிமிடம் அங்கிருந்த அனைவரும் சிலையாகவே மாறிப் போயினர்.

அங்கன்வாடியில் படித்து வரும் 3 வயது குழந்தை பூமியின் தாயான குமுத் லுஹாரியா கூறும்போது, ‘‘மாதாந்திர செலவுகளை சமாளிக் கவே மிகுந்த கடினமாக இருக்கிறது. தங்கத்தை எல்லாம் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. அப்படி இருக்கும்போது எங்கள் குழந்தைக்கு பிச்சைக்காரரான பிரஜாபதி தங்கத் தோடு வழங்கியது பிரமிப்பை ஏற்படுத்திவிட்டது’’ என்கிறார் கண்கள் பனிக்க.

அந்த அங்கன்வாடியில் படிக் கும் குழந்தைகளில் மிகுந்த ஏழை குழந்தைகள் 10 பேரை மட்டும் தேர்ந் தெடுத்து வைக்கும்படி பிரஜாபதி முன்கூட்டியே தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் மெஹ்சானா நகரில் உள்ள குடிசைப் பகுதியில் வசித்து வரும் குழந்தைகளை அங்கன்வாடி ஊழியர்கள் தேர்வு செய்து வைத்திருந்தனர். அவர் களுக்கு மட்டும் பிரஜாபதி இந்த தங்கத் தோடுகளை வழங்கினார்.

இது குறித்து பிரஜாபதி கூறும் போது, ‘‘பெண் குழந்தைகள் கல்வி கற்க ஊக்கம் அளிக்க வேண்டும். அவர்கள் தன்னம்பிக்கையுடன், சொந்தக் காலில் நிற்க வேண்டும். மெஹ்சானா பள்ளிகளில் படிக்கும் ஆண் குழந்தைகள் அளவுக்கு பெண் குழந்தைகள் படிக்க வருவ தில்லை. எனவே தான் இத்தகைய பரிசுகளை அளித்து அவர்களை கல்வி கற்க ஊக்கம் அளித்து வருகிறேன்’’ என்றார்.

தினசரி தேவைக்காக பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் மத்தி யில் பெண் கல்வியை ஊக்குவிக் கும் நோக்கத்தில் பிச்சை எடுத்தப் பணத்தில் தங்கத்தை தானமாக வழங்கும் பிரஜாபதி போன்ற பிச்சைக்காரர்களை, இதுவரை எங்கும் கண்டதில்லை என்று அப் பகுதி மக்களும் வியக்கின்றனர்.

பிரஜாபதியின் சமுதாய சேவையை உணர்ந்த தீபக் ஷா என்ற பொற்கொல்லர், அவருக்கு உதவும் பொருட்டு தள்ளுபடி விலையில் அந்த தங்கத் தோடுகளை செய்து கொடுத்துள்ளார் என்பது உதிரி தகவல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x