தமிழகத்துக்குப் பாராட்டு; சாலை விபத்துகளை பாதியாகக் குறைத்தமைக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புகழாரம்

மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி | கோப்புப்படம்
மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி | கோப்புப்படம்
Updated on
1 min read


தமிழகம் சாலை விபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் 50 சதவீதம் குறைத்து இலக்கை வெற்றிகரமாக எட்டிவிட்டது என்று என்று மத்திய சாலைப்போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

எம்ஐடி கல்வி நிறுவனம் சார்பில் “சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு” குறித்து காணொலிக் கருத்தரங்கை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

2025-ம் ஆண்டுக்குள் நாட்டில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையையும், உயிரிழப்புகளையும் பாதியாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளோம். 2030ம் ஆண்டுக்குள் சாலை விபத்துக்கள் இல்லாத சூழலை உருவாக்கவும் இலக்கு வைத்துள்ளோம்.

கடந்த ஆண்டு ஸ்வீடனில் நடந்த மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் பங்கேற்றோம். அப்போது, 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் சாலை விபத்துக்கள் இல்லாத சூழலை உருவாக்குவோம் என உறுதியளித்துள்ளோம்.

விரைவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை, உயிரிழப்புகளை 50 சதவீதம் குறைத்துவிடுவோம் அதை நிறைவேற்றுவோம்.

நாங்கள் வகுத்த இந்த இலக்கை இன்று வெற்றிகரமாக தமிழகம் ஏற்கெனவே அடைந்துவிட்டது. தமிழகத்தில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் 53 சதவீதம் குறைந்துள்ளது. இதற்காக தமிழகத்துக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்..

பாதுகாப்பான சாலைப் பயணத்துக்காக நெடுஞ்சாலையை 4 முதல் 16 பிரிவுகளாகப் பிரிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதுமட்டுமல்லாமல் வாகன உற்பத்தியாளர்களும், வாகனத்தில் ஓட்டுநர்கள், பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்கக் கோரியும் வலியுறுத்தியுள்ளோம், அந்த புதிய தொழில்நுட்பங்கள் படிப்படியாக அமலாகும்

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in