இமாச்சலப்பிரதேசத்தில் 6 முறை முதல்வர்: காங். மூத்த தலைவர் வீரபத்ர சிங் காலமானார்

இமாச்சலப்பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் | கோப்புப்படம்
இமாச்சலப்பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் | கோப்புப்படம்
Updated on
1 min read


காங்கிரஸ் மூத்த தலைவரும், இமாச்சலப்பிரதேச முன்னாள் முதல்வருமான வீரபத்ர சிங் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87.

சிம்லாவில் உள்ள ஐஜிஎம்சி மருத்துவமனையின் மூத்த மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ஜானக் ராஜ் கூறுகையில் “ முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் தீவிர உடல்நலக்குறைவால் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் காலமானார்.

கரோனவால் பாதிக்கப்பட்டிருந்த வீரபத்ர சிங் ஏப்ரல் 13ம் தேதி மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பினார்.

ஆனாலும், அவரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. இதையடுத்து சில நாட்களுக்குமுன் இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்” எனத் தெரிவித்தார்.

கடந்த இரு நாட்களாக வென்டிலேட்டர் சிகிச்சையில் வீரபத்ரசிங் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திங்கள்கிழமை இரவு வீரபத்ரசிங்கிற்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது, அதன்பின் அவரின் உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியதால் வென்டிலேட்டர் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார்.

முன்னாள் முதல்வர் வீரபத்ரசிங் மறைவுக்கு முத்லவர் ஜெய் ராம் தாக்கூர், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் 9 முறை எம்எல்ஏவாகவும், 5 முறை முதல்வராகவும் இருந்தவர் வீரபத்ர சிங். மாநிலத்ில் 1983 ஏப்ரல் 8 முதல் 1990 மார்ச் 5-ம் தேதிவரை முதல்வராகவும், 1993 முதல் 1998, 2003 முதல் 2007 வரை, 2012 முதல் 2017ம் ஆண்டுவரை வீரபத்ர சிங் முதல்வராக இருந்துள்ளார்.

கடந்த 1998 முதல் 2003ம் ஆண்டு வரை மாநில எதிர்க்கட்சித் தலைவராகவும் வீரபத்ர சிங் இருந்துள்ளார். தற்போது சோலன் மாவட்டத்தில் உள்ள அர்கி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாகவும் வீரபத்ர சிங் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

வீரபத்ரசிங்கிற்கு பிரதிபா சிங் என்ற மனைவியும், விக்ரமாதித்யா சிங் என்ற மகனும் உள்ளனர். பிரதிபா சிங் முன்னாள் எம்.பி., விக்ரமாத்தியா சிங், சிம்லா ஊரக தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in