சாதகமான சூழல் இருப்பதால் மேகேதாட்டு அணை கட்டியே தீருவோம்: முதல்வர் எடியூரப்பா திட்டவட்டம்

சாதகமான சூழல் இருப்பதால் மேகேதாட்டு அணை கட்டியே தீருவோம்: முதல்வர் எடியூரப்பா திட்டவட்டம்
Updated on
1 min read

மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகாவுக்கு சாதகமான சூழல் இருப்பதால், அங்கு அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடகா புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரி வித்து வருகிறது. கடந்த மாதம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ‘இந்த திட்டத் துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது' என பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குடிநீர் தேவை

பெங்களூரு மாநகரின் குடிநீர் மற்றும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காகவே கர்நாடக அரசு மேகேதாட்டு திட்டத்தை தீட்டியது. அந்த திட்டத்தால் இரு மாநிலங்களும் பயன்பெறும் என்பதை விளக்கி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினேன். அந்த திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைக்குமாறு நட்பின் அடிப்படையில் கோரி இருந்தேன். ஆனால் மு.க. ஸ்டாலின் பல்வேறு காரணங்களால் அதற்கு நேர்மறையான பதிலை எழுதவில்லை.

மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டு கர்நாடக மக்கள் அச்சமோ, சந்தேகமோ பட தேவையில்லை. இந்த விவகாரத்தில் எல்லா மட்டத்திலும் கர்நாடகாவுக்கு சாதகமான சூழல் உள்ளது. எனவே, மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம். அந்த திட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை. விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும். இதற்காக, முறையான அனுமதி பெறும் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in