

நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மகாராஷ்டிராவும் கேரளாவும் உள்ளன. கரோனா இரண்டாவது அலையில் இருந்து வெளியேறுவதிலும் இரு மாநிலங்களிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவில் புதிய நோயாளிகள் எண்ணிக்கை 11 சதவீதம் குறைந்தது. ஆனால் கேரளாவில் 7 சதவீதமும் மகாராஷ்டிராவில் 4 சதவீதமும் இது அதிகரித்துள்ளது.
நாடு முழுவதிலும் சென்ற வாரம் புதிதாக 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது. இதில் இவ்விரு மாநிலங்களில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் புதிய நோயாளிகள் உருவாகினர். இதுநாட்டின் சென்ற வார புதிய நோயாளிகளின் எண்ணிக்கையில் 48 சதவீதம் ஆகும்.
கேரளாவில் கடந்த வாரம் 84,791 பேருக்கு தொற்று ஏற் பட்டது. மகாராஷ்டிராவில் புதிய நோயாளிகள் எண்ணிக்கை கடந்த வாரம் 61,283 ஆக இருந்தது.
சிக்கிமில் நோயாளிகள் எண் ணிக்கை குறைவாக இருந்தாலும் புதிய நோயாளிகள் எண்ணிக்கை கடந்த வாரம் 63 சதவீதம் அதிகரித்துள்ளது.
முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது திரிபுராவில் 13 சதவீதமும் மணிப்பூரில் 10 சதவீதமும் புதிய நோயாளிகள் எண்ணிக்கை கடந்த வாரம் அதிகரித்துள்ளது. இதனிடையே 91 நாட்களில் முதல்முறையாக தினசரி இறப்புஎண்ணிக்கை கடந்த திங்கட்கிழமை 500-க்கு கீழே வந்துள்ளது.