Published : 06 Jul 2021 03:11 AM
Last Updated : 06 Jul 2021 03:11 AM

மரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட முடிவு: ஜார்க்கண்ட் பசுமை வீரர்களுக்கு குவியும் பாராட்டுகள்

ஜார்க்கண்டில் மரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடுவதற்காக, மூங்கிலில் கட்டி தூக்கிச் சென்ற இளைஞர்கள்.

ராஞ்சி

ஜார்க்கண்ட்டில் மரத்தை வேருடன்பிடுங்கி வேறு இடத்தில் நடு வதற்காக தூக்கிச் சென்ற இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உதவி கலெக்டர் சஞ்சய்குமார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருபுகைப்படத்தை பதிவிட்டு பாராட்டிஇருந்தார். அந்தப் புகைப்படத்தில்6 இளைஞர்கள் ஒரு மரத்தை சேதப்படுத்தாமல் வேரோடு பெயர்த்து வேறு இடத்தில் பாதுகாப்பாக நட்டுவைப்பதற்காக நீண்ட மூங்கிலில் அந்த மரத்தை கட்டி எடுத்துச் செல்கின்றனர். இந்தப் புகைப்படத்தை பதிவிட்ட சஞ்சய் குமார், ‘ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு படம் சொல்லும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இளைஞர்களின் இந்தச் செயல் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மரங்களைக் காப்போம் என்ற ஹேஷ்டேக்குடன் ஏராளமானோர் இந்தப் படத்தை பகிர்ந்துள்ளனர். மரங்களையும் சுற்றுச் சூழலையும் நேசிக்கும் அந்த இளைஞர்களை உண்மையான பசுமை வீரர்கள் என்றும் அவர்களுக்கு வணக்கம்என்றும் ஆயிரக்கணக்கானோர் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் பதிவாளர் ஒருவர், ‘‘மரத்தை சேதப்படுத்தாமல், ஜேசிபிஇயந்திரத்தையோ, மரத்தை நகர்த்தும் இயந்திரங்களையோ பயன்படுத்தாமல் மனித முயற்சிமூலம் வேரோடு எடுத்துச் சென்றுபாதுகாப்பாக வேறு இடத்தில் நடும்இளைஞர்களின் செயல் பாராட்டுக்குரியது’’ என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவாளர் கூறுகையில், ‘‘இந்தப் புகைப்படம் மரங்களை நேசிப்போருக்கும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கும் மிகப்பெரிய உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. பசுமை வீரர்களான இளைஞர்களுக்கு பாராட்டுகள்’’ என்று தெரிவித்துள்ளார். மேலும், பல பதிவர்களும் பசுமை வீரர்களை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x