Last Updated : 03 Feb, 2016 10:03 AM

 

Published : 03 Feb 2016 10:03 AM
Last Updated : 03 Feb 2016 10:03 AM

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்: 10 ஆண்டுகளை நிறைவு செய்தது - வெற்றிக்கு உரிமை கோரும் பாஜக, காங்கிரஸ்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 10 ஆண்டு களை நிறைவு செய்திருக்கிறது. இத்திட்டத்தின் வெற்றி தொடர்பாக, காங்கிரஸும், பாஜகவும் பரஸ் பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத் துள்ளன.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பரிதாபத்துக்குரிய நிலை யில் இருந்த இந்த திட்டத்தில் வெளிப் படைத் தன்மையை புகுத்தியுள் ளோம் என பாஜக தலைமையிலான மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட சம்மேளனத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

நீண்ட காலமாக அரசு திட்டம் செயல்பாட்டில் இருக்கும்போது, அதன்மீது ஓர் அக்கறையின்மை இருக்கும். கடந்த 2013-14-ம் ஆண் டில் இத்திட்டம் 7-8வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது, ஒரு வகையான புறக்கணிப்பு மனோ பாவம் இருந்தது.

2014-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, நாடாளுமன்றத் துக்கு வெளியே, “இத்திட்டம் நிறுத் தப்படும் அல்லது நிதி குறைக்கப் படும்” என பேச்சு எழுந்தது. ஆனால், புதிய அரசு இத்திட்டத்தை முன் னெடுத்து மட்டும் செல்லவில்லை. நிதியையும் அதிகரித்தது. இவ்வாறு அவர் பேசினார்.

ஊரக மேம்பாட்டுத் துறை இணை யமைச்சர் சுதர்சன் பகத் கூறும் போது, “ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியிலிருந்த போது இத்திட்டம் பரிதாபத்துக் குரிய நிலையில் இருந்தது. இத் திட்டத்துக்கு அதிகபட்ச நிதியை அளித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான். கடந்த 18 மாதங்களில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்கான நிதியை ரூ.33 ஆயிரம் கோடியிலிருந்து மோடி அரசு ரூ.36, 977 கோடியாக உயர்த்தியது” எனத் தெரிவித்தார்.

ராகுல் கிண்டல்

இந்நிலையில் மோடி அரசை ராகுல் விமர்சித்துள்ளார்.

“காங்கிரஸ் அரசின் தோல்வி யின் அடையாளச் சின்னமாக ஊரக வேலை உறுதித் திட்டம் இருக்கிறது என மோடி முன்பு குறிப்பிட்டிருந்தார். தற்போது இத்திட்டத்தை அவரது அரசு புகழ்ந்துள்ளது.

தேசிய பெருமை, கொண்டாட் டம் என அத்திட்டத்தை குறிப் பிட்டுள்ளது. இதுதான் மோடியின் அரசியல் அறிவுக்கான ஒளிரும் உதாரணம்” என ராகுல் காந்தி ட்விட்டரில் கூறியுள்ளார்.

கடந்த பட்ஜெட் தொடரில் பேசிய பிரதமர் மோடி, “இந்த திட்டத்தை மூடி விடுவேன் என நீங்கள் நினைக்கிறீர்களா? என் அரசியல் அறிவு அதனை அனுமதிக்காது. இது, காங்கிரஸ் அரசின் 60 ஆண்டு கால ஆட்சியில் வறுமையை ஒழிப்பதில் அடைந்த தோல்வியின் வாழும் அடையாளம். ஆடல் பாடலுடன் இந்த திட்டத்தை தொடர்வேன்” என தெரிவித் திருந்தார்.

தற்போது, இத்திட்டத்தை அரசு புகழ்ந்திருப்பதைத் தொடர்ந்து, மோடியின் அரசியல் அறிவை ராகுல் கிண்டல் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x