2 டோஸ் கரோனா தடுப்பூசியால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு: நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தகவல்

மும்பையில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பி.எம்.சி. மருத்துவமனையில் நேற்று பயனாளி ஒருவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்திய மருத்துவ ஊழியர். படம்: பிடிஐ
மும்பையில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பி.எம்.சி. மருத்துவமனையில் நேற்று பயனாளி ஒருவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்திய மருத்துவ ஊழியர். படம்: பிடிஐ
Updated on
1 min read

தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டால் கரோனா தொற்றின் மூலம் ஏற்படும் உயிரிழப்பில் இருந்து 98 சதவீதம் நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் கூறியுள்ளார்.

பஞ்சாப் அரசுடன் இணைந்து சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்தியது. இதன் முடிவு களை, நிதி ஆயோக் உறுப்பினர் (சுகா தாரம்) வி.கே.பால் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி குறித்து பஞ்சாப் போலீஸார் மத்தியில் ஆய்வு நடத்தப்பட் டது. இந்த ஆய்வில் தடுப்பூசியே செலுத்திக் கொள்ளாத 4,868 போலீஸாரில் 15 பேர் உயி ரிழந்தது தெரியவந்தது. அதாவது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களில் உயிரிழப்பு சம்பவம் ஆயிரத்துக்கு 3.08 ஆக உள்ளது. அடுத்து தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டும் செலுத்திக்கொண்ட 35,856 போலீஸாரில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உயி ரிழப்பு சம்பவம் ஆயிரத்துக்கு 0.25 ஆக உள்ளது. ஆனால் 2 டோஸ்களும் செலுத்திக் கொண்ட 42,720 போலீஸாரில் 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழப்பு சம்பவம் ஆயிரத்துக்கு 0.05 ஆக மட்டுமே உள்ளது.

இதன்படி தடுப்பூசியின் ஒரு டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு, கரோனா தொற்றின் மூலம் ஏற்படும் உயிரிழப்பில் இருந்து 92 சதவீதம் பாதுகாப்பு கிடைக்கிறது. 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண் டால் 98 சதவீதம் பாதுகாப்பு கிடைக்கிறது.

முன்களப் பணியாளர்களாக இருந்து வரும் போலீஸார் மிகவும் ஆபத்தான சூழலில் பணியாற்றி வருகின்றனர். எனவேதான் அவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

கரோனா தொற்றால் நோயாளிகள் உயி ருக்கு ஆபத்தான நிலைக்கு செல்வதை யும் அவர்கள் உயிரிழக்க நேரிடுவதையும் தடுப்பூசி தடுக்கும் என்பது இத்தகைய ஆய்வுகள் மற்றும் அவற்றின் கண்டுபிடிப்பு கள் மூலம் நமக்கு தெரியவருகிறது. எனவே மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தடுப்பூசி மீது நாம் அனைவரும் நம்பிக்கை வைக்க வேண்டும். தவறாமல் அதனை செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு வி.கே.பால் கேட்டுக்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in