Last Updated : 04 Jul, 2021 03:12 AM

 

Published : 04 Jul 2021 03:12 AM
Last Updated : 04 Jul 2021 03:12 AM

கரோனா தடுப்பூசியை அடுத்து 5 கிலோ இலவச ரேஷன் பையில் மோடி படம்

புதுடெல்லி

தடுப்பூசியை அடுத்து ஏழைகளுக் கான 5 கிலோ இலவச ரேஷன் பையில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் அச்சிடப்படுகிறது. இதன் மீது பாஜகவின் தேசிய தலைமை தம் கட்சி ஆளும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

கரோனா பரவலால் நாடு முழுவதிலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் களுக்கு உதவ 80 கோடி பேருக்கு ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜ்னா’ திட்டத்திள் கீழ் இலவசமாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது. மாதந்தோறும் வழங்கப்படும் இந்த இலவச திட்டம் வரும் நவம்பர் 2021 வரை நீட்டிக்கும். இதற்கான பையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் படம் அச்சிடப்படுகிறது.

இதன் மீது பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அருண்சிங் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த அறிக்கையில் இலவச உணவு பை குறித்த 11 வகையான அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டுள்ளன. இந்த பையில் பிரதமர் நரேந்திர மோடியின் படம், பாஜக ஆளும் மாநில முதல் அமைச்சர்கள் படம், கட்சியின் சின்னம் தாமரை உள்ளிட்டவை அச்சிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து பரவலாக பொது இடங்களில் விளம்பரங்களும் அளிக்க அறி வுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான துணிப் பதாகைகளில் இடம்பெறும் வாசகங்கள் மற்றும் வடிவமைப்பை பாஜகவின் தேசிய தலைமைக்கு அனுப்பி அனுமதி பெற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பைகளின் வடிவமைப்பையும் பாஜகவின் தேசிய தலைமை அமைக்க உள்ளதாகத் தெரிகிறது. இந்த உணவு விநியோகத்தின் போது பாஜகவின் தொகுதி எம்.பி மற்றும் எம்எல்ஏக்கள் ரேஷன் கடைக்கு சென்று பொதுமக்களை சந்திக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க போடப்பட்டு வரும் தடுப்பூசியின் சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடி படம் அச்சிடப் பட்டதால் சர்ச்சையானது. இதை பாஜகவின் கூட்டணி கட்சியான பிஹாரின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவின் தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி விமர்சித்து கருத்து வெளியிட்டார். தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலங்களின் சான்றிதழில் பிரதமரின் படம் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x