Published : 04 Jul 2021 03:12 AM
Last Updated : 04 Jul 2021 03:12 AM

திருமலை முன்பதிவு: ஆர்ஜித சேவை தேதியை மாற்றலாம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் மூலம் ஆர்ஜித சேவைகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள், சுவாமியை தரிசிக்கவில்லையெனில், தேதியை மாற்றிக்கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி முதல் கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் ஏழுமலையானின் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள், தங்களின் வசதியை பொருட்டு மறு தேதிக்கு சுவாமியை தரிசனம் செய்து கொள்ளலாம்.

இவர்கள், இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் சுவாமி தரிசனத்திற்கு தங்களது டிக்கெட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x