இந்தியாவில் 35 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசு தகவல்

இந்தியாவில் 35 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

இந்தியாவில் இன்றிரவு (ஜூலை 3) மாலை 7 மணி வரையில் 35 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 35 கோடிக்கும் அதிகமான (35,05,42,004) கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 21ல் இருந்து அனைவருக்கும் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை தொடங்கி உள்ள நிலையில், இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 57.36 லட்சம் (57,36,924) தடுப்பூசி டோஸ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.

18-44 வயது பிரிவில் 28,33,691 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 3,29,889 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோசையும் இன்று பெற்றனர், 37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 99,434,862 பேர் முதல் டோசையும், 2,712,794 நபர்கள் இரண்டாம் டோசையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இதுவரை பெற்றுள்ளனர்.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, பிகார், குஜராத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் 18-44 வயது பிரிவனருக்கு 50 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியுள்ளன.

ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், தில்லி, ஹரியானா, ஜார்கண்ட், கேரளா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் கொவிட் தடுப்பு மருந்தை இது வரை வழங்கியுள்ளன.

தமிழகத்தில் மட்டும் 5816249 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 136622 நபர்கள் இரண்டாம் டோசையும் இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 190648 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 349 பேர் இரண்டாம் டோசையும் இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in