லஷ்கர் அமைப்புடன் தொடர்புடைய 3 இளைஞர்கள் காஷ்மீரில் கைது

லஷ்கர் அமைப்புடன் தொடர்புடைய 3 இளைஞர்கள் காஷ்மீரில் கைது
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில், லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப் படும் 3 இளைஞர்களை கைது செய் திருப்பதாக போலீஸார் நேற்று தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த ஆண்டு குப்வாரா மாவட்டத்தில் செல்போன் கோபுரங்கள் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை விசி தாக்கு தல் நடத்தினர். இந்தத் தாக்குத லுடன் தொடர்புடையதாக கருதப் படும் பர்வேஸ் லோன், உமர் மிர் மற்றும் அஜாஸ் பட் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜ்வர் பகுதியில் உள்ள லஷ்கர்-இ-தய்பா தீவிரவாத அமைப்பின் தளபதி முசாவுடன் இவர்கள் மூவரும் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் மற்றொரு தீவிரவாதியான சைபுல்லா, எல்லை பகுதியில் இருந்தபடி இவர்களுக்கு அறி வுரை வழங்கியதும் தெரியவந்துள் ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in