மாநிலங்களுக்கு 3 நாட்களில் 44 லட்சம் கரோனா தடுப்பூசி: மத்திய அரசு உறுதி

மாநிலங்களுக்கு 3 நாட்களில் 44 லட்சம் கரோனா தடுப்பூசி: மத்திய அரசு உறுதி
Updated on
1 min read

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, 33.63 கோடிக்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. 44 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் 3 நாட்களில் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

கோவிட் தடுப்பூசியின் புதிய திட்டம் 2021 ஜூன் 21ம் தேதி தொடங்கியது. அதிக தடுப்பூசிகள் கிடைக்கச் செய்வதன் மூலம் தடுப்பூசி போடும் நடவடிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதை சிறப்பாக திட்டமிடுவதற்கும், தடுப்பூசி விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், தடுப்பூசி கிடைக்கும் நிலவரம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகின்றன.

நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கோவிட் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குகிறது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி போடும் புதிய திட்டத்தின்படி, தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்கும் 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்குகிறது.

இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 33.63 கோடி (33,63,78,220) தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இவற்றில் இன்று காலை 8 மணி வரை, வீணான தடுப்பூசிகள் உட்பட 33,73,22,514 டோஸ்கள் காலியாகியுள்ளன.

மேலும், 44,90,000 தடுப்பூசி டோஸ்களை அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இன்னும் 3 நாட்களில் பெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in