தூதரக வளாகத்தில் ட்ரோன்: பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் ட்ரோன் பறந்துள்ளது விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு விமானதள வளாகத்தில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த விமானப்படை நிலைய தொழில்நுட்ப பகுதியில் அண்மையில் அடுத்த குண்டு வெடித்தது. அந்த வெடிகுண்டுகள் குறைந்த வீரியம் கொண்ட ஐஇடி வகையைச் சேர்ந்தவை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது.


ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதும் உடனடியாக ராணுவம் செயலில் இறங்கியது. ராடார் மூலம் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால் தொடர் தாக்குதல் நடத்தப்படவில்லை. இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து காஷ்மீரில் சில பகுதிகளில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வளாகத்தில் ட்ரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டுக்கு சொந்தமான ட்ரோன் என கூறப்படுகிறது.
விதிமுறைகளை மீறி ட்ரோன் இயக்கப்பட்டுள்ளதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியது என இந்திய தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in