6 மாநிலங்களில் வேகமெடுக்கும் கரோனா: மத்தியக் குழுக்கள் விரைகின்றன

6 மாநிலங்களில் வேகமெடுக்கும் கரோனா: மத்தியக் குழுக்கள் விரைகின்றன
Updated on
1 min read

கரோனா தொற்றுப் பரவல் அதிகமாக உள்ள ஆறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உயர்மட்டக் குழுவை அனுப்புகிறது.

கேரளா, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர், மணிப்பூர் ஆகிய 6 மாநிலங்களில் கரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. ஆகையால் இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உயர்மட்டக் குழுவை அனுப்பிவைக்கிறது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதலில் இந்தக் குழுக்கள், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆறு மாநிலங்களும் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து முதல் தகவலைத் திரட்டும். பின்னர் அங்கே மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு பேர் கொண்ட குழு செல்லும். அதில் ஒருவர் மருத்துவ நிபுணராகவும், மற்றுமொருவர் பொது சுகாதாரத் துறை நிபுணராகவும் இருப்பார்.

எந்தெந்த மாநிலங்களுக்கு யார் தலைமையில் குழு:

1.மணிப்பூர்: மருத்துவர் எல்.ஸ்வஸ்திசரண்
2.அருணாச்சலப் பிரதேசம்: மருத்துவர் சஞ்சய் சதுக்கன்
3.திரிபுரா: மருத்துவர் ஆர்.என்.சின்ஹா
4.கேரளா: மருத்துவர் ருச்சி ஜெயின்
5.ஒடிசா: மருத்துவர் தான்
6.சத்தீஸ்கர்: மருத்துவர் திபாகர் சாஹூ

இந்தக் குழுவினர் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கரோனா தடுப்பு நடவடிக்கை முயற்சிகளுக்கு தோள் கொடுக்கும். இந்த மாநிலங்களுக்கு உடனடியாக மத்தியக் குழு விரைந்து செல்லும். அங்கு, கரோனா பரிசோதனை, கண்காணிப்பு, கட்டுப்பாடுகள் பகுதியை உருவாக்குதல் ஆகியனவற்றை கண்காணிப்பார். மேலும், கரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றுகின்றனரா என்பதையும் ஆராய்வர்.

இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தின்படி 46,617 ஆக உள்ளது. கரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in