Last Updated : 02 Jul, 2021 09:50 AM

 

Published : 02 Jul 2021 09:50 AM
Last Updated : 02 Jul 2021 09:50 AM

ரூ.17 கோடியை மத்திய அரசுக்கு அனுப்பிய நிரவ் மோடி சகோதரி: அமலாக்கப்பிரிவு கிடுக்கிப்பிடியால் அப்ரூவராக மாறினார்

தொழிலதிபர் நிரவ் மோடி | கோப்புப்படம்

புதுடெல்லி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்து லண்டனில் வாழ்ந்துவரும் நிரவ் மோடி மீதான வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள அவரின் சகோதரி புர்வி மோடி, ரூ.17.25 கோடியை மத்திய அரசின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பான அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பும், உதவியும் வழங்குவதாகவும் புர்வ் மோடியும், அவரின் கணவரும் தெரிவித்துள்ளதாக அமலாக்கப்பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்து லண்டனுக்கு தப்பியவர் தொழிலதிபர் நிரவ் மோடி. லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது நிரவ் மோடி ஜாமீனில் இருந்து வருகிறார். இந்த வங்கி மோசடியில் நிரவ் மோடியின் சகோதரி புர்வ் மோடிக்கும், அவரின் கணவர் மயங்க் மேத்தாவுக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டியது.

மேலும், நிரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தும் பணியிலும் அமலாக்கப்பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நிரவ் மோடியின் சகோதரி புர்வ் மோடி, தனக்கும் இந்த மோசடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அமலாக்கப்பிரிவுக்கு விசாரணைக்கு உதவுவதாகக் கூறி அப்ரூவராக மாறினார்.

இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் புர்வ் மோடியும், அவரின் கணவர் மயங்க் மேத்தாவும் அப்ரூவர்களாக மாறவும், உண்மைகளைக் கூறி, அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு உதவவும் சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

நிரவ் மோடி சகோதரி புர்வ் மோடி

இருவருக்கும் எதிராக கடந்த 2018 மே மற்றும் 2019 பி்ப்ரவரி மாதம் அமலாக்கப்பிரிவு சார்பில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் கடந்தமாதம் 24்ம்தேதி அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு புர்வ் மோடி அளித்த தகவலில் “ தன்னுடைய பெயரில் தனக்குத் தெரியாமல் லண்டன் வங்கியில் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. அந்தப் பணம் தனக்குச் சொந்தமானது அல்ல” எனத் தெரிவித்துள்ளார். அந்த வங்கிக் கணக்கில் இருந்த ரூ.17.25 கோடி(23,16,889 டாலர்) பணத்தை மத்தியஅரசின் வங்கிக்கணக்கிற்கு புர்வ் மோடி மாற்றியுள்ளார்” என அமலாக்கப்பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கில் புர்வ் மோடியும், அவரின் கணவரும் வழக்குத் தொடர்பான முழுமையான உண்மைகளையும், தகவல்களையும் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x