Published : 02 Jul 2021 03:12 AM
Last Updated : 02 Jul 2021 03:12 AM

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந் தைய வன்முறைக்கான காரணங்கள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி, மூன்றாவது முறை யாக வெற்றி பெற்று ஆட்சி அமைத் துள்ளது. கடந்த மே 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல், உடமைகளுக்கு சேதம், தீவைப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறின. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அரங்கேறியதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

இந்த வன்முறையில் தங்கள் கட்சி யைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் கொல்லப்பட்டதாகவும் தாக்குதலுக்கு அஞ்சி ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் பாஜக குற்றம் சாட்டியது. இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்தவர் களும் தாங்கள் தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்தனர். இந்த வன்முறை தொடர்பாக மாநில ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த வன்முறை தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, கடந்த ஜூன் 18-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கு வங்கத்தில் மனித உரிமை மீறல் தொடர்பான அனைத்து புகார்களையும் விசாரிக்க ஒரு குழுவை ஏற்படுத்த தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவர் ராஜீவ் ஜெயின் தலைமையில் கடந்த 21-ம் தேதி குழு அமைக்கப்பட்டது.

இக்குழு வன்முறையால் பாதிக்கப் பட்ட இடங்களில் நேரில் ஆய்வு செய் தது. வன்முறையால் இடம்பெயர்ந் தவர்களின் புகார்களை விசாரித்து ஒரு சுருக்கமான அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசா ரணைக்கு வரும் என எதிர்பார்க் கப்படுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்கத் தில் தேர்தலுக்குப் பிந்தைய வன் முறைக்கான காரணங்கள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசா ரணை கோரி ஹரிசங்கர் ஜெயின் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி வினீத் சரண் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசு, மேற்கு வங்க அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x