

அவதூறு வழக்கு தொடர்வதன் மூலம் எங்களை அச்சுறுத்த முடியாது என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் நேற்று அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு மூலம் எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது. ஊழலுக்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும்.
டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் குறித்து கமிஷன் அமைத்துள்ளோம். அந்த கமிஷனின் விசாரணைக்கு அருண் ஜேட்லி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவர் நிரபராதியா என்பதை அவரே நிரூபிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.