Published : 01 Jul 2021 03:14 AM
Last Updated : 01 Jul 2021 03:14 AM

நாடு முழுவதும் 16 மாநிலங்களில் உள்ள 3.6 லட்சம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி: பாரத்நெட் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் 16 மாநிலங்களில் உள்ள 3.6 லட்சம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வசதி அளிக்கும் பாரத்நெட் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு மற்றும் தனியார் பங்கேற்போடு (பிபிபி) இத்திட்டம் நிறைவேற்றப்படும்.

நாட்டில் 1,000 நாட்களில் அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன்படி தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பிராட்பேண்ட் சேவையில் தனியாரும் சிறப்பான சேவை அளிக்க வசதியாக இத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்ட செயலாக்கத்துக்கு தேவைப்படும் நிதி அளவான ரூ.19,041 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிராட் பேண்ட் சேவையில் அனைத்து மாநிலங் கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள கிராமங்கள் இணைக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் அரசு மற்றும் தனியார் பங்கேற்போடு 16 மாநிலங்களில் உள்ள 3 லட்சத்து 61 ஆயி ரம் கிராமங்கள் பிராட்பேண்ட் இணைப்பு வசதி பெறும். இத்திட்டத்தை செயல்படுத்த சர்வதேச அளவில் டெண்டர் கோரப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நேற்று தெரிவித்தார். தகவல் தொழில்நுட்ப இணைப்பில் இது மிகவும் சிறந்த திட்டமாக விளங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரத்நெட் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.19,041 கோடி ஒதுக்கப்படுவ தாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ‘‘பாரத்நெட் திட்டத்துக்கான மொத்த ஒதுக் கீடு ரூ.61,109 கோடியாக உயர்ந்துள்ளது. மே 31-ம் தேதி நிலவரப்படி ஏற்கெனவே ரூ.42,096 கோடி செலவிடப்பட்டு 1,56,223 கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி அளிக் கப்பட்டுள்ளது’ என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் கிராமப் பகுதிகளில்தான் 60 கோடி மக்கள் வாழ்கின்றனர். இவர்களுக் கும் பிராட்பேண்ட் எனப்படும் இணைய வசதி கிடைக்க இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. கிராம பஞ்சாயத்து அலுவலகங் கள், கிராமங்களில் உள்ள பள்ளிகள், தபால் அலுவலகங்கள் உள்ளிட்டவை இதன்மூலம் இணைப்பு வசதி பெறும். மேலும், டெலி-மெடிசின், தொலைதூரக் கல்வி வசதி, இ-ஹெல்த், இ-என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட வசதிகளை கிராமங்களுக்கும் கொண்டு செல்ல வழி ஏற்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கும் டிஜிட்டல் நுட்பத்தை நாடு முழுவதும் செயல்படுத்த அரசு தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இணைய வசதி இல்லாத கிராமப் பகுதி களே இல்லை என்ற நிலையை உருவாக்கு வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என தனித்தனியே நிதியை ஒதுக்காமல் ஒட்டுமொத்தமாக இத்திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கி செயல்படுத்து கிறது. ஒட்டுமொத்த சேவை கட்டாய நிதி (யுஎஸ்ஓஎப்) மூலம் இத்திட்டம் செயல்படுத் தப்படுகிறது. தொலைத் தொடர்பு நிறுவனங் களிடம் இருந்து பெறப்படும் வரி மூலம் இந்த நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா பரவல் காரணமாக இத்திட்ட செயலாக்கத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 5 லட்சம் கி.மீ. கண்ணாடி யிழை கேபிள் (ஆப்டிக்கல் பைபர்) போடப் பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்திருந்தது. தொலைதூர மற்றும் மலைப்பகுதியில் அமைந்துள்ள 5,200 கிராம பஞ்சாயத்துகளுக்கு செயற்கைக் கோள் மூலம் இணைப்பு வசதி ஏற்படுத் தப்படும் என்றும், இதுவரை 3,200 கிராமங்களுக்கு இத்தகைய வசதி அளிக்கப்பட் டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x