

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசிய தாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகரி தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் நடிகை யுமான ரோஜா ஓராண்டு அவை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலத்தின் சட்டமன்ற குளிர்கால கூட்டதொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று, ஆளும் கட்சியான தெலுங்கு தேச கட்சி மற்றும் எதிர்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே ’கந்து வட்டி’ குறித்த காராசாரமான விவாதம் நடைபெற்றது. அதிக ’கந்து வட்டி’ வசூலிப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது வரை தனது கட்சியை சேர்ந்த 20 பேர் மீதும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 65 பேர் மீதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 பேர், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 3 பேர் உட்பட பலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
இதனிடையே, ‘கந்து வட்டி’ குறித்து சந்திரபாபு நாயுடு முன் கூட்டியே தனது கருத்தை கூற கூடாது என வலியுறுத்தி எதிர்க்கட்சி யினர் அமளியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், அவையில் இருந்த சந்திரபாபு நாயுடுவை எதிர்க்கட்சி யினர் முற்றுகையிடவும் முயன்ற னர். இதனால் அவையில் இருந்து கூண்டோடு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து மதியம் மீண்டும் அவை கூடிய பின்னர், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் அவைத்தலைவரை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது நகரி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ரோஜா, சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக விமர்சித் ததாக தெலுங்கு தேச கட்சியினர் கடுமையாக ஆட்சேபித்தனர். ரோஜாவை 6 மாதம் முதல் 1 வருடம் வரை அவையில் இருந்து இடை நீக்கம் செய்ய வேண்டும் என தெலுங்கு தேச கட்சியினர் பேர வைத் தலைவரிடம் முறையிட்டனர்.
நிதி அமைச்சர் யனமல ராமகிருஷ்ணுடு ரோஜாவை ஓராண்டு அவையில் இருந்து நீக்க வேண்டுமென முன் மொழிந்தார். இதனை ஏற்ற பேரவைத் தலைவர் கோடல சிவபிரசாத், ரோஜாவை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ரோஜாவை இடை நீக்கம் செய்ததற்கு ஒய்.எஸ்.ஆர் காங் கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உட்பட அவரது கட்சி உறுப்பினர்கள் கடுமையாக ஆட்சேபித்தனர்.