வெளிநாட்டு விமான சேவைக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு

வெளிநாட்டு விமான சேவைக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு
Updated on
1 min read

கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட வெளிநாட்டு விமான சேவைக்கான தடையை ஜூலை 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (Directorate General of Civil Aviation DGCA) இன்று (புதன்கிழமை) சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், வெளிநாடுகளுக்குச் செல்லும் சரக்கு மற்றும் பயணிகள் விமான சேவைக்கான தடை வரும் ஜூலை 31 வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கரோனாவால் நிறுத்தப்பட்ட வெளிநாட்டு விமான சேவைகளை 15 மாதங்களுக்குப் பின் இன்றுடன் ஜூன் 30ம் தேதியுடன் முடித்துக்கொள்ளப்படுவதாக இருந்தது.

ஆனால், பல்வேறு நாடுகளும் இரண்டாம், மூன்றாம் அலையில் சிக்கியுள்ளதால் இந்தத் தடை உத்தரவு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குறிப்பிட்ட சில கார்கோ விமானங்களும், பப்புள் ஜோனில் (பாதுகாக்கப்பட்ட பகுதி) உள்ள நாடுகளுக்கு இடையே சில குறிப்பிட்ட பயணிகள் விமானமும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சர்வதேச விமானங்கள் சிலவும் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் உரிய அனுமதியுடன் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in