ராஜஸ்தானில் முதல் டெல்டா பிளஸ் பாதிப்பு உறுதி: ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்ட மூதாட்டி நோயிலிருந்தும் மீண்டார்

ராஜஸ்தானில் முதல் டெல்டா பிளஸ் பாதிப்பு உறுதி: ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்ட மூதாட்டி நோயிலிருந்தும் மீண்டார்
Updated on
1 min read

ராஜஸ்தானில் முதல் டெல்டா பிளஸ் தொற்று பிகானரில் கண்டறியப்பட்டுள்ளது. 65 வயது மூதாட்டிக்கு டெல்டா பிளஸ் தொற்று ஏற்பட்டு அவர் குணமடைந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.

கரோனா 2-ம் அலை குறையத் தொடங்கும் இந்த சமயத்தில், கரோனா வைரஸ் உருமாறி புதிதாக டெல்டா பிளஸ் தொற்றாக மெல்லப் பரவி, நாட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாட்டில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானர் மாவட்டத்தில் முதல் டெல்டா பிளஸ் தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளார்.

கடந்த மே 30ம் தேதியன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் சளி மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அங்கு அந்தப் பெண்ணின் தொண்டை, மூக்கிலிருந்து சேகரிக்கப்பட்ட சளி மாதிரி ஜீனோம் சீக்குவென்ஸிங்குக்கு (மரபணு வரிசைப்படுத்துதல்) உட்படுத்தப்பட்டது. அதில் அந்தப் பெண்ணுக்கு டெல்டா பிளஸ் திரிபு பாதித்தது உறுதியானது.

ஆனால் அந்தப் பெண் முழுக்க முழுக்க அறிகுறியற்றவறவராக இருந்ததாகவும், ஏற்கெனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர் என்பதால், நோயிலிருந்து மீண்டுவிட்டதாகவும் பிகானர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஓ.பி.சஹார் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தப் பெண் வசிக்கும் பாங்களா நகர் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவிருப்பதாக சஹார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in