

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர்கள் தங் களது இயல்பு வாழ்க்கையை தொடங்கலாம் என்று நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே. பால் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர் களிடம் வி.கே. பால் கூறியதாவது:
நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக்கி வருகிறது. அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்கள் தங்களது இயல்பு வாழ்க்கையைத் தொடங் கலாம்.
ஆனால் அதே நேரத்தில் முகக்கவசம் அணிதல், சமூகஇடைவெளியைக் கடைப்பிடித்தல், கூட்டமாக இருக்கும் இடங்களைத் தவிர்த்தல் போன்றவிதிமுறைகளை பின்பற்றவேண்டும்.
2 டோஸையும் செலுத்திக் கொண்ட முதியவர்கள், வீட்டுக்கு வெளியே நடந்து செல்லலாம். தங்களது வழக்கமான பணிகளை அவர்கள் மேற்கொள்ளலாம்.
மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பால் ஜூன் 21-ம் தேதி சாதனை அளவாக 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த வாரம் முழுவதும் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடரும்.
இவ்வாறு நிதி ஆயோக் உறுப்பினர் கூறினார். - பிடிஐ