

நைஜீரியாவில் கடற்கொள்ளையர் களின் பிடியில் இருந்த 5 இந்தியர் கள் விடுதலை செய்யப்பட்டுள் ளனர். இந்திய அரசின் தீவிர முயற்சியால் இவர்கள் விடுவிக் கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று கூறும்போது, “நைஜீரியாவில் கடற்கொள்ளையர்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த இந்திய கப்பல் ஊழியர்கள் 5 பேர் விடு விக்கப்பட்டுள்ளனர். இதற்காக நைஜீரிய அதிபருக்கு நன்றி தெரி விக்கிறேன். மேலும் இதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட நமது தூதர் கன்ஷ்யாமை பாராட்டு கிறேன்” என்று கூறியுள்ளார்.
நைஜீரியாவில் வார்ரி என்ற இடத்தில் இருந்து கடந்த 11-ம் தேதி இவர்கள் கடத்திச் செல்லப் பட்டனர். இது தொடர்பாக வெளி யுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிக்கை கேட்டுப் பெற்றார். 12-ம் தேதி நைஜீரிய அதிபரை அங்குள்ள இந்தியத் தூதர் ஏ.ஆர்.கன்ஷ்யாம் சந்தித்து பேசினார். அதன்பின் கடற்கொள்ளை யர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியர்களை மீட்டதாக கூறப்படுகிறது.