2015-ல் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் ஜம்மு காஷ்மீரில் 100 தீவிரவாதிகள் பலி

2015-ல் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் ஜம்மு காஷ்மீரில் 100 தீவிரவாதிகள் பலி
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2015-ம் ஆண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி அபு காசிம் உட்பட மொத்தம் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை (வடக்கு) மக்கள் தொடர்பு அதிகாரி கர்னல் எஸ்டி.கோஸ்வாமி நேற்று கூறியதாவது:

2015-ம் ஆண்டு ராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரும்பாலும் நல்ல பலனை கொடுத்தன. இதில் மொத்தம் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் 2013-ம் ஆண்டில் ஹைதர்புரா பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அபு காசிமும் ஒருவர் ஆவார்.

இப்பகுதியில் உள்ள தீவிரவாத தடுப்பு மையமானது தொடர்ந்து சிறப்பாக செயல் பட்டு தீவிரவாதிகளை தலை யெடுக்கவிடாமல் ஒடுக்கி வரு கிறது. உளவுத் துறையின் தக வலை அடிப்படையாகக் கொண்டு ஜம்மு காஷ்மீர் காவல் துறை மற்றும் மத்திய ஆயுதப் போலீஸ் படை (சிஏபிஎப்) ஆகியவற்றுடன் இணைந்து தாக்குதல் நடத்துவது தான் அதிரடி நடவடிக்கையின் சிறப்பான அம்சம்.

தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டியதுடன், 350-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள், 40 வெடிகுண்டுகள் மற்றும் இதர ஆயுதங்கள் போன்ற வையும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது, தீவிரவாதிகளின் நாசகர திட்டங்கள் பற்றி தெளிவாக தெரி கிறது. மேலும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து உறு துணையாக இருந்து வருவதும் புலனாகிறது.

மாநிலத்தில் பாதுகாப்பு நிலவரம் மேம்பட்டிருந்தாலும் தீவிரவாதி களுக்கு பாகிஸ்தான் பக்கபலமாக நின்று துணை புரிவது தொடர்வதால் இயல்புநிலை திரும்பிவிட்டதாக திருப்தி அடைய முடியாது.

தீவிரவாதிகள் தொய்வின்றி செயல்படுகின்றனர். பிரிவினை வாதிகளும் தீவிரவாதிகளும் கைகோத்து செயல்படுவது தொடர்ந் தாலும் ராணுவம் அதை முறியடிப் பதில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

முக்கிய தீவிரவாதிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தீவிரவாதிகளால் நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் வெகுவாக சரிந்துவிட்டது. இருந்தாலும் தமது இயக்கங்களில் உள்ளூர் ஆட்களை நியமிக்கும் போக்கு தொடர்வது கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in