

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவரு வதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதன்காரணமாக கர்நாடகா, கேரளா மாநிலங்களி்ன் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கர் நாடகாவில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இத னால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதே போல கேரளாவின் வயநாடு மலைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை யால் கபிலா ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர் மழை காரணமாக காவிரி, கபிலா ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜ சாகர், கபினி ஆகிய அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்துள் ளது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, மண்டியாவில் 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 19 ஆயிரத்து 714 கன அடி நீர் வந்து கொண்டிருக் கிறது. இதையடுத்து, அணையில் இருந்து விநாடிக்கு 6 ஆயி ரத்து 500 கன அடி நீர் வெளி யேற்றப்படுகிறது. அதே போல, மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு விநாடிக்கு 7 ஆயிரத்து 390 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த இரு அணைகளில் இருந்தும் தலா 5 ஆயிரம் கனஅடி நீர் வீதம், விநாடிக்கு மொத்தமாக 10 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக காவிரி நீர்ப்பாசன கழகம் தெரிவித்துள்ளது. இந்த நீர் இன்னும் இரு தினங்களில் தமிழக எல்லையான பிலி குண்டுலுவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமி ழகத்தின் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந் நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பது விவ சாயிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.