

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திருச்சானூர் பத்மாவதி தாயர் கோயில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, நேற்று காலையில் சுப்ரபாத சேவை, சகஸ்ரநாம அர்ச்சனை, நித்ய அர்ச்சனை ஆகியவை நடைபெற்றது. பின்னர் தங்க திருச்சி வாகனத்தில் உற்சவர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பிறகு தங்க கொடி மரம் அருகே உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க தங்க கொடி மரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்பட்டது. இரவில் சின்ன சேஷ வாகனத்தில் உற்சவரான பத்மாவதி தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இவ்விழா வரும் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது.