தினசரி கோவிட்; குணமடைபவர்கள் எண்ணிக்கை கடந்த 38 நாட்களாக உயர்வு

தினசரி கோவிட்; குணமடைபவர்கள் எண்ணிக்கை கடந்த 38 நாட்களாக உயர்வு
Updated on
1 min read

தினசரி கோவிட் பாதிப்பை விட தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை கடந்த 38 நாட்களாக அதிகமாக உள்ளது.

81 நாட்களுக்குப்பின், நாட்டில் தினசரி கோவிட் பாதிப்பு 60,000க்கும் கீழ் குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 58,419 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

தொடர்ந்து கடந்த 13 நாட்களாக, நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட கூட்டு முயற்சியின் காரணமாக தினசரி கோவிட் பாதிப்பு குறைந்துள்ளது.

கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது நாட்டில் 7,29,243 பேர் கொவிட் சிகிச்சை பெறுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கையில் 30,776 குறைந்தது.

தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை, தினசரி கோவிட் பாதிப்பை விட கடந்த 38 நாட்களாக அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 87,619 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,87,66,009-ஐ எட்டியுள்ளது. இவர்களின் சதவீதம் 96.27.

கோவிட் பரிசோதனை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18,11,446 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 39.10 கோடிக்கும் மேற்பட்ட (39,10,19,083) பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in