இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 60,753 ஆக குறைவு: ஆனால் 3வது அலையை தவிர்ப்போமா?

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 60,753 ஆக குறைவு: ஆனால் 3வது அலையை தவிர்ப்போமா?
Updated on
1 min read

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 60,753 ஆக குறைந்துள்ளது.

இருப்பினும், மூன்றாவது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி எழலாம் எனக் டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவர் ரஞ்சித் குலேரியா கூறியிருக்கிறார். 6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளலாம் என எச்சரிக்கும் அவர் அதனைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,98,23,546

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 60,753

இதுவரை குணமடைந்தோர்: 2,86,78,390

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 97,743

கரோனா உயிரிழப்புகள்: 3,85,137

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1,647

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 7,60,019

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 26,89,60,399

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூன்றாவது அலை தவிர்க்கமுடியாததா?

இந்தியா இரண்டாவது அலையில் திக்கித் திணறி மீண்டு கொண்டிருக்கிறது. அனைத்து மாநிலங்களும் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், மக்கள் முதல் இரண்டு அலைகளிலும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அதனாலேயே, மூன்றாவது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி எழலாம் எனக் கூறுகிறார் எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவர் ரஞ்சித் குலேரியா. 6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளலாம் என அவர் கூறியிருக்கிறார். தேசிய அளவில் இந்த எண்ணிக்கை வெளிப்படையாகத் தெரிய சற்று காலமாகலாம். ஆனால், மக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாவிட்டால் நிச்சயமாக மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது என்று அவர் எச்சரித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in