Published : 19 Jun 2021 08:54 AM
Last Updated : 19 Jun 2021 08:54 AM

முன்னாள் தடகள வீரர் 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் மறைவு: கரோனாவுக்கு பிந்தைய பாதிப்பால் உயிரிழப்பு

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைந்தார். அவருக்கு வயது 91. கரோனாவிலிருந்து மீண்டவர், கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் உயிரிழந்தார். அவரது மறைவு தடகள வீரர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

பறக்கும் சீக்கியர்' என்று அழைக்கப்பட்ட மில்கா சிங், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில் தங்கம் வென்ற ஒரே இந்தியர்

1958ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் மில்கா சிங் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றார்.

1960ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை சிறிய வித்தியாசத்தில் தவறவிட்டாலும் அந்தப் போட்டி அவருக்கு சர்வதேச அடையாளம் கிடைத்தது.

1962ஆம் ஆண்டு இந்தோனேசியத் தலைரகர் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டப் பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றார்.

பிரதமர் மோடி இரங்கல்:

மில்கா சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "எண்ணற்ற இந்தியர்கள் இதயத்தில் சிறப்பான இட்த்தை பிடித்திருந்த ஒரு விளையாட்டு வீரரை நாம் இழந்துவிட்டோம். அவரின் உற்சாகம் ஊட்டும் பண்பு மில்லியன் கணக்கானவர்களிடம் அவரை கொண்டு சேர்த்தது. அவரின் இழப்பு பெருந்துயர்."என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x