டூல்கிட் வழக்கு தொடர்பாக ட்விட்டர் இந்திய தலைவரிடம் விசாரணை

மணீஷ் மகேஸ்வரி
மணீஷ் மகேஸ்வரி
Updated on
2 min read

சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் - தலைவர் மணீஷ் மகேஸ்வரியிடம் டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.

கடந்த மே 24-ம் தேதி டெல்லி மற்றும் குருகிராமில் உள்ள ட்விட்டர் நிறுவன மூத்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதன் அடுத்தகட்டமாக தற் போது பெங்களூருவில் உள்ள இந்தியப் பிரிவு தலைவர் மணீஷ் மகேஸ்வரியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. காங்கிரஸ் புகார் மீது பதிவு செய்துள்ள டூல்கிட் வழக்கு தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

புகார் தொடர்பாக நேரில் ஆஜராகி பதிலளிக்குமாறு மணீஷ் மகேஸ் வரியிடம் கூறப்பட்டிருந்தது. கரோனா பரவல் காரணமாக நேரில் ஆஜராக அவகாசம் கேட்டிருந்தார். இந்நிலையில், பெங்களூரு வுக்கு வந்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். காவல் துணை ஆணையர் பிரமோத் குஷ்வாகா தலைமையிலான போலீஸார் இந்த விசாரணையை நடத்தியுள்ளனர்.

அவரிடம் 40 கேள்விகளை கேட்டதாகவும், ட்விட்டர் நிறுவனத்தின் கொள்கை, அதாவது ட்விட்டர் பதிவுகளை பகிர்வது தொடர்பாக பின்பற்றப்படும் விதிமுறைகள் குறித்தும் விசாரிக்கப்பட்டது.

காங்கிரஸ் தரப்பில் வெளியிடப்பட்ட வீடியோ பகிர்வில் பிரதமர் நரேந்திர மோடியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பாத்ரா புகார் செய்திருந்தார்.

தாங்கள் வெளியிட்ட வீடியோ பதிவு மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது டூல்கிட் வழக்கு எனப்படுகிறது.

காங்கிரஸ் சமூக ஊடக ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த ரோஹன் குப்தா,ராஜீவ் கவுடா ஆகி யோர் டூல்கிட் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக முதலில் இரண்டு நோட்டீஸ் களை டெல்லி போலீஸார் மணீஷ் மகேஸ் வரிக்கு அனுப்பினர். ஆனால் அதற்கு பொதுப்படையான பதிலையே அவர் அனுப்பியிருந் தார். இதைத் தொடர்ந்தே போலீஸ் அதிகாரி கள் அடங்கிய குழு லடோ சராய் மற்றும் குருகிராம் பகுதியில் செயல்படும் ட்விட்டர் அலுவலகத்துக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். கடந்த 27-ம் தேதி போலீஸார் இது தொடர்பாக வெளியிட்ட தகவலில், ட்விட்டர் செயல்பாடு தெளிவற்ற, திசைதிருப்பும் பதிலாகவே இருந்ததாக தெரிவித்தனர்.

ட்விட்டர் நிறுவன அதிகாரி கள் அளிக்கும் தகவல்கள் போலீ ஸாரையும், நீதித்துறையையும் வேண்டுமென்றே குழப்பும் வகையில் உள்ளதாக போலீ ஸார் தெரிவித்திருந்தனர்.

ட்விட்டர் நிறுவனம் வெளி யிட்ட பதில்கள் அனைத்துமே பொய்யான, சட்டத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் ஒரு தனி யார் நிறுவனம் மேற்கொள்ளும் நடவடிக்கை போல உள்ளது. பொது அரங்கில் ட்விட்டர் அளிக்கும் சேவை அனைத்துமே சட்ட விதிகளுக்கும், உண்மைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். ஆனால் ட்விட்டர் நிறுவனம் அளித்த விளக்கம் விசாரணை அதிகாரிகள், சட்ட விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. அது எவ்வித சட்ட விதிகளின்படியும் செயல்படவில்லை என்றும் போலீஸார் வெளி யிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in