

ஆந்திர மாநிலத்தில் கோவி ஷீல்டு மற்றும் கோவாக்சின் கரோனா தடுப்பூசிகள் பயன் பாட்டில் உள்ளன. இதில் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அதிக அளவிலான மக்கள் செலுத்தி கொள்கின்றனர்.
இந்த தடுப்பூசியில்தான் முதல் டோஸுக்கும், 2வது டோஸுக்கும் 82 நாட்கள் இடைவெளி இருப்பதால் இதனையே மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
தற்போது ஆந்திராவில் அனைத்து ஆரம்ப சுகாதார மையங் களிலும் 5 வயது குழந்தைகளின் தாய்மார்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சி யாக, இம்மாதம் 21-ம் தேதி முதல் 18 வயது நிரம்பி யவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
ஆதலால், இப்போது முதலாகவே கரோனா தடுப்பூசி களை அதிக அளவில் வர வழைக்க ஆந்திர அரசு முயற்சித்து வருகிறது. இதுதவிர, குளோபல் டெண்டர் மூலமாக வும் தடுப்பு மருந்துகளை வரவழைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், புணேவில் உள்ள சீரம் மருந்து நிறுவனத் தில் இருந்து 9 லட்சம் கோவி ஷீல்டு தடுப்பூசிகள் விஜயவாடா விமான நிலையத்திற்கு நேற்று வந்தடைந்தன. இவை மாநில தடுப்பூசி மருந்துகள் நிலுவைமையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று மாவட்டங்களுக்கு அனுப்பப்படவுள்ளன.