ஆரவல்லி மலையில் 10,000 வீடுகளை அகற்றுவதற்கு தடை விதிக்க முடியாது: மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆரவல்லி மலையில் 10,000 வீடுகளை அகற்றுவதற்கு தடை விதிக்க முடியாது: மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

ஹரியாணாவின் ஆரவல்லி மலையில் உள்ள 10,000 வீடுகளை அகற்ற உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி அருகே தொடங்கும் ஆரவல்லி மலைத் தொடர் ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத் வரை நீண்டுள்ளது. ஹரியாணா வின் பரிதாபாத் மாவட்ட ஆரவல்லி மலைப் பகுதியை ஆக்கிரமித்து 10,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை அகற்ற பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2020 பிப்ரவரியில் உயர் நீதிமன்றத் தின் உத்தரவை உச்ச நீதிமன் றம் உறுதி செய்யது. இந்த விவகாரம் தொடர்பான மற்றொரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆரவல்லி மலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.

இதே விவகாரம் தொடர்பாக, ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படும் 5 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி விசாரித்து கடந்த 7-ம் தேதி முக்கிய உத்தரவை பிறப்பித்தனர். அதன்படி பரிதாபாத் மாவட்ட ஆரவல்லி மலைப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 10,000-க்கும் மேற்பட்ட வீடுகளை 6 வாரங்களுக்குள் அகற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஓராண்டுக்கும் மேல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வனப் பகுதியை விட்டு வெளியேற முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது. ஆக்கிரமிப்பை அகற்ற செல்லும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும். உடனடியாக 10,000-க்கும் மேற்பட்ட ஆக்கிர மிப்பு வீடுகளை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால் பாதிக்கப் படும் மக்கள் நிவாரணம் கோருகின்றனர். இதுகுறித்து தனியாக விசாரிக்கப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர். -பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in