

பாலிவுட் சினிமாவின் அடையாள மாகத் திகழும் பழம்பெரும் நடிகர் திலீப் குமாருக்கு நாட்டின் உயரிய பத்மவிபூஷண் விருது நாளை வழங்கப்படுகிறது.
பாலிவுட் திரையுலகை கடந்த 1950-ம் ஆண்டு முதல் ஆட்டிப் படைத்து எண்ணற்ற ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் நடிகர் திலீப் குமார். தேவதாஸ், மதுமதி, முஹல்-இ-அஸம், கங்கா ஜமுனா, லீடர், ராம் அவுர் ஷ்யாம் போன்ற எண்ணற்ற திரைப்படங்கள் அவ ருக்கு தேசிய அளவில் பெரும் புகழை அள்ளிக் கொடுத்தது. கடைசி யாக 1998-ம் ஆண்டு குயிலா என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பின், திரையுலகில் இருந்து முழுமையாக ஒதுங்கிக் கொண்டார்.
திரையுலகில் திலீப்குமாரின் சாதனைகளை கவுரவிக்கும் வகை யில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு நாட்டின் உயரிய பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட் டது. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இந்த விருது வழங் கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க வில்லை.
மும்பையில் உள்ள இல்லத்தில் நெருங்கிய நண்பர்களுடன் நேற்று 93-வது பிறந்தநாளை திலீப்குமார் கொண்டாடிய நிலை யில், பத்மவிபூஷண் விருதினை அவரது இல்லத்துக்கே நேரில் சென்று வழங்க நாளை டெல்லியில் இருந்து புறப்பட்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மும்பை வருகிறார்.
இதற்கிடையில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்க ளின் துயரில் பங்கேற்கும் வகை யில், இந்த ஆண்டு திலீப் குமார் தனது பிறந்தநாளை மிகுந்த எளிமை யாக கொண்டாடியதாக, அவரது மனைவியும் நடிகையுமான சாய்ரா பானு தெரிவித்தார்.