

வேலை வாங்கி தருவதாக கூறி சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்ததாக பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் டிரைவர் என்று கூறப்படும் ராஜேந்திரகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
மும்பையில் நடிகை சங்கீதா பிஜ்லானியின் வீட்டில் வேலைப் பார்த்து வந்த, 17 வயது சிறுமி ஒருவரை வேலை வாங்கி தருவதாகக் கூறி, அது தொடர்பாக பேச மும்பையில் உள்ள நல்லாஸ்போரா என்ற ஹோட்டலுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக, நேற்று மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டுள்ள பெண் சிறுமியா என்பது குறித்து உறுதி செய்ய அவரது பிறப்பு சான்றை சரிப்பார்க்க வேண்டும் என்றும், அதுவரையில் இது குறித்து எந்த தகவலையும் வெளியிட முடியாது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் மகாராஷ்டிராவின் லத்தூரை சேர்ந்தவர் என்றும், வேலை தேடி மும்பை வந்த அவர் நடிகை சங்கீதாவின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்ததாக தெரிகிறது.